|
|
|
www.aanmegam.com....... Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 12-10-2008 |
|
|
அன்பே சிவம்...Om Namasivaya சிவனின் இலிங்கத் திருவுருவம். சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது. சிவம் என்றால் இறைவன். லிங்கம் என்பது அடையாளம். எனவே சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும். லி – லயம், கம் -- தோற்றம். உலகின் அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கும்,ஒடுங்குவதற்குமான இடம்
இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது. சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது. இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இயற்கையோடு இசைந்த தத்துவம். நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
மித்ராசாமி SMP.DA
|
|
|
Home
[C] Copyright 2004-2008
www.Aanmegam.com
CONTACT |