|
|
|
www.aanmegam.com....... Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 14-01-2011 |
|
|
அன்பே சிவம்...Om Namasivaya
தைப்பொங்கல் திருநாள்
என்பது ஒரு மத சம்பந்தமான திருநாள் அல்ல. மாறாக இது ஒரு
தமிழர் திருநாளாகும். அதிலும் தமிழ் உழவர் திருநாள் என்று
சொன்னால் மிகையாகாது. உலகம் முழுவதும் மே தினம் என்று
தொழிலாளர் தினத்தின கொண்டாடுகின்றனர். இந்த பழக்கம் தோன்றுவதற்கு
பல நூறு வருடங்களிற்கு முன்னரே உழவர் திருநாளாக அதாவது
விவசாய பெருமக்களின் தொழிலாளர் தினமாக தைப் பொங்கலை கொண்டாடி
மகிழ்ந்தனர் நம் தமிழ் மக்கள்.
2011 ஆண்டு 14-01-2011 வெள்ளிக்கிழமை பரணி நட்சத்திரமும், தசமி திதியும், சித்த யோகமும் கூடிய சுபநேரமான இரவு மணி 9 நிமிடம 45க்கு (இந்திய நேரப்படி) சூரிய பகவான் மகர ராசிக்குள் பிவேசிக்கிறார். அதாவது தனது பகற் பொழுதை ஆரம்பிக்கிறார். காலை 10 மணி முதல் 11 மணிக்குள்ளான காலம் பொங்கல் வைக்க சிறந்த நேரமாகும். இந்த வருடம் தமிழ் புத்தாண்டும் தைத்திங்கள் முதல் நாளிலேயே கடைப்பிடிக்கப்பட உள்ளதால் காலையில் எழுந்து குளித்த புத்தாடை அணிந்து 10 மணி முதல் 11 மணிக்குள்ளான நல்ல நேரத்தில் வீட்டு வாசலில் பசும் சாணத்தினால் மெழுகி சாணத்தினால் மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அந்த பிள்ளையாரிற்கு அருகம்புல் சாற்றி, சிகப்பு மலர்களினால் வழிபாடு செய்ய வேண்டும். பின் அடுப்பு வைத்து பொங்கல் பானைக்கு புதிய மண் பானைக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் கொத்தை பானையின் வாயினைச் சுற்றி கட்டி அடுப்பேற்றி பொங்கல் சரியும் வேளையில் குலவை ஒலி எழுப்பி பொங்கலோ பொங்கல் என பொங்கலை வரவேற்க வேண்டும். பொங்கல் பொங்கிய பின்னர் சிறிய மேடையில் பொங்கல் பானையை வைக்கவேண்டும். 3 தலை வாழையிலையிட்டு ஒவ்வொரு வாழையி;லையிலும் பொங்கல் கனிவகைகள் வெற்றிலை, பாக்கு வடை போற்றவற்றை வைத்து, முதற் படையலை சூரிய பகவானிற்கும், இரண்டாவது படையலை குல தெய்வத்திற்கும், 3 வது படையலை நமது முன்னோர்களிற்கும் படைக்க வேண்டும். அதாவது மலர், தூப, தீப நைவேத்திய ஆராதனை செய்ய வேண்டும். 3 வது படையலை காக்கைக்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும். இது நமது முன்னோர்களை சென்றடையும் என்பது ஐதீகம். பின்னர் நல்ல நேரத்தில் பெரியோர்களை வணங்கி ஆசீர்வாதம் வாங்கி அவர்கள் கையினால் கைவிசேடம் வாங்கவும். இந்த தமிழர் திருநாளாம் தைத் திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாகவும் இனிய பொங்கல் திருநாளாகவும் கொண்டாடி சகலரும் சகல நலமும் சகல வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். வாழ்க வளமுடன் மித்ராசாமி. பாண்டிசாமி.
|
|
|
Home
[C] Copyright 2004-2008
www.Aanmegam.com
CONTACT |