|

|
<


அன்பே
சிவம்...Om Namasivaya
கருடனும்
பல்லியும்

இராமர் இராவணனை வதம் செய்த பிறகு சேதுவில் சிவபூஜை செய்வதற்காக
அனுமனை காசியில் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி கோரினார்.
அனுமன் காசியை அடைந்து பார்த்தார். எது சிவலிங்கம் எது சுயம்புலிங்கம்
என்று அறியாது விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு
மேலே வானில் கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை
கூறியது. இந்த இரு குறிப்புகளால் அது சுயம்புலிங்கம் என்றறிந்த
அனுமன் அந்த சுயம்புலிங்கத்தை போர்த்து எடுத்துசென்றான்.
காசியின் காவலராகிய காள பைரவர் அது கண்டு கோபித்தார்.என்
அனுமதியின்றி நீ எப்படி சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று
கூறி அனுமனை தடுத்தார்.
பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் சண்டை நடந்தது. அப்போது
தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம்
தென்னாடு போக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.
பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தை கொடுத்தனுப்பினார். ஆனால்
தன் அனுமதியின்றி லிங்கத்தை எடுக்கமுயன்ற அனுமருக்கு துணை
புரிந்த கருடன் காசி எல்லைக்கள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள்
காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் சாபமிட்டார்.
பைரவரின் சாபத்தின் படி இன்றும் காசி மாநகரில் கருடன் பறப்பதில்லை,பல்லி
ஒலிப்பதில்லை.இது ஒரு அதிசயம் தான்.
|
|