www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  12-10-2008

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 
 
 

Religion

Aanmegam
Kaumaram 
Sugant
Geta
Murugan
Tirumalai 
 
 
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

அண்மையில் அர்த்தமமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் தங்கள் மதத்தில் எந்த சரத்தோ, அல்லது எடுத்துச் சொல்ல எந்த நல்ல விடயமோ இல்லாததலோ என்னவோ ஏனைய மதங்களில் இல்லாத சிலவற்றை கூறி தங்கள் மதத்திற்கு வரும்படி அழைக்கும் கீழ்தரமான மதப்பிரசாரத்தினைக் கண்டேன். இதற்கு பதிலழிக்க வேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு எங்களை தள்ளி விட்டுள்ளனர்.

 An article about Hinduism by Ramesh


                           இவற்றிலிருந்து அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்றால் பூமியில் அவதரித்து இரத்தம் சிந்தி மரித்த இயேசுவே கடவுள் என்று. ஆனால் இயேசு கிறிஸ்து எந்த சந்தர்பத்திலும் தன்னை இறைவனாக கூறியதில்லை. பிதா என்று ஒருவர் பரமண்டலத்தில் இருக்கிறார். அவரே தேவன். நான் தேவ குமாரன் என்றே கூறியுள்ளார்.


                         ஜேசு கிறிஸ்து தன்னை எந்த சந்தர்ப்பத்திலும் கடவுள் என்ற கூறியதாக நான் அறியவில்லை. தன்னை தேவ குமாரன் என்றும் இறைவனின் பிரதிநிதி என்றுமே கூறியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யார்? இதை நன்றாக சிந்தித்து முடிவுசெய்யுங்கள். எனவே உயிரோடு வந்த முதற் கடவுளே யார் என்று உங்களிற்கு தெரியாத போது இன்னொரு என்ற வார்த்தையே தேவையில்லை என நினைக்கிறேன். உண்மையை உணர வேண்டிய நிலையிருப்பது யார் என்பது புரியவில்லை. காசு பணத்தைக்காட்டி மதமாற்றம் செய்ய வேண்டிய கட்டாய நிலையிலிருக்கும் ஒரு பிரிவினர் இப்படி பேசுவது மிகவும் வேடிக்கையானது. இன்று அமெரிக்காவில் எத்தனை பேர் இந்து மதத்திறகு மாறுகிறார்கள் என்பது நிதர்சனம். இங்கு மதக்கோட்பாடு மட்டுமே மதமாற்றத்திற்கு காரணம். உங்கள் மதத்தின் பெருமைகளை மட்டும் சொல்லி மற்றவர்களை உங்கள் மதத்திற்கு கூப்பிடுங்கள். அதை ஏற்று நம்பி வருபவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

                         பாவிகளே என்னிடம் வாருங்கள் உங்களை இரட்சிக்கிறேன் என்று சொன்னவர். தனது கடைசி நாட்களில் பிதாவே இந்தப் பாவிகளின் பாவ மூட்டைகளை என்னால் சுமக்க முடியவில்லை என்னை உம்மிடம் அழைத்துக் கொள்ளும் என வேண்டியதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அதாவது தன்னுடைய கடைசி நாட்களில் அவர் அடுத்தவரின் பாவத்தை சுமக்க விரும்பவில்லை என்பதனையே இது காட்டுகிறது. இப்படி பாவ சுமைகளை சுமக்க முடியாது என மனம் வருத்தி தன்னையே காத்துக் கொள்ள முடியாமல் அழிந்து போன ஒருவரின் பின்னால் நான் போகிறேன் நீங்களும் வாருங்கள் அதாவது தன்னையே காத்துக் கொள்ள முடியாத ஒருவர் என்னைக் காக்கிறார் உங்களையும் வாருங்கள் என அழைப்பது மண் குதிரையை நம்பி நான் ஆற்றில் இறங்கியுள்ளேன் நீங்களும் வந்து இந்த மண் குதிரையில் ஏறுங்கள் என்று அழைப்பது போலிருக்கிறது.

                          உலகிற்கு வந்து இரத்தம் சிந்தி சென்றவர் தான் கடவுள் இல்லை தேவ குமாரன் தான் என்று அவரே சொல்லியிருக்கும் போது இவர்கள் அவரை கடவுளாக்குவது வேடிக்கையானது.


                         
இறைவன் நமக்காக பூமியில் அவதரித்து இரத்தம் சிந்தினார் ரிக் வேதத்தில் புரு~ சூக்தத்தில் சொல்லிருப்பது கிறிஸ்தவ மதத்தினைப்பற்றியல்ல. ஸ்ரீனிவாச பெருமான் இவ்வுலகில் தோன்றி இரத்தம் சிந்தியது தாங்கள் அறிந்திருக்கவில்லை என நினைக்கிறேன்.

                          சாம வேதத்திலிருந்து உதாரணம் காட்டி சிந்திக்கச் சொல்லிருக்கிறீர்கள். யேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவர் சொன்ன கருத்துக்கள் அன்றய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிற்கு தவறாக தெரிந்து அவர் அதற்காக தண்டிக்கப்பட்டார். அவர் தம்மை உலக மக்களின் வாழ்க்கை முறைக்காக பலி கொடுக்கவில்லை என்பதனை நீங்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பலி கொடுத்தல் என்ற தமிழ் வார்த்தையிற்கு சரியான அர்தத்தினைப் தெரிந்து நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

அகத்திய மா முனிவரின் ஞானம் 30 நூலிருந்து 23ம் பாடலை உதாரணம் காட்டியுள்ளீர்கள் அந்தப்பாடல் அந்த நூலிற்குரியது அல்ல


வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்
குவலயத்திற்றானு தித்துக்குவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.

(இது நீங்கள் கொடுத்திருந்த பாடல்)

மாயனாம்பூரகந்தான் மயங்குவாண்
ராமசீதாலெட்சுமியுமாலும் பாரு
ஆயனாம்பச்சைமா கமலமேனி
மாயனோடுஅரனைப்போற் காந்தியாகும்
தூயமாம்புரியவட்டம் வாசிதேசி
யுயிர்க்குசுகமாந்தி ஆலம் பொசிப்பாய்
ஞாயமாம் ஓம்-வம்-மம்-உமாவென்று
நாட்டமாம்பிராணாய வரிசையாமே (
அகத்திய ஞானம் 30 பாடல் 23)


இந்தப்பாடல் தான் அகத்திய ஞானம் 30 ல் 23 ம் பாடல்
அகத்தியர் ஞானம் 30 ன் முழுப்பாடல்களும் வெகு விரைவில் எமது இணையத் தளத்தில் வெளியிடப்படும்.


                      
அகத்திய முனிவரின் பாடல் என்று சொல்லி ஏதோ ஒரு பாடலை உதாரணம் காட்டிய நீங்கள் அகத்திய மாமுனிவரின்; முழப்பாடல்களையும் அதாவது அவரின் முழு நூற்களையும் படித்துள்ளீர்களா?
                        வாத சௌமியம் என்னும் சௌமிய சாகரம் 1200 ல் அகத்திய மா முனிவர் உலகம் தோன்றிய வரலாற்றினை 118 ஆம் பாடலிலிருந்து 139 ஆம் பாடல் வரை மிக தெளிவாகவும் உண்மையான கடவுள் யார் என்பதற்கும் விளக்கம் கூறியுள்ளார். அதிலிருந்து 121 ஆம் பாடல்
கேளப்பா பராபரமாய் நின்ற சோதி
கிருபையுடன் சிவன் படைக்க நினைத்த போது
மாளப்பா வல்ல பரம் தன்னில்தான்
வளமான சிவமதுதான் உண்டாச்சப்பா
மேலப்பா சிவமதிலேதான் சக்தி உண்டாகி
வுpளங்கி நின்ற சக்தியிலே மைந்தா கேள்
சூளப்பா சதாசிவம்தான் துலங்கி நின்ற
சொற்பெரிய சதாசிவத்தின் மகேசுவரம்தானே 121

இப்படியாக தெய்வங்கள் உருவான வழிமுறையைக் கூறி உலகம் தோன்றிய வரலாற்றினை கூறியுள்ளார். இதிலிருந்து என்ன அகத்திய மகரி~p தெரிவிக்கின்றார் என்றால் உலகத்தினையும் அதிலுள்ள சகலவற்றினையும் படைத்து காப்பது சிவனே அன்றி வேறு தெய்வமில்லை. இதனை மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

சக்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவருண்டு
பக்தியினால் மனமடக்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தைவிடார் பரமஞானி
சுத்தியே அலைவதில்லை சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சம்தானே 1

                          இது அகத்தியர் ஞானம் - 9 இன் முதற்பாடல் பராபரம் ஒன்றே தெய்வம் சகல உயிர்களிற்கும் அதுவே தெய்வம் என்று கூறியுள்ளதை கவனிக்கவும். இப்படியாக தனது நூல்கள் எல்லாவற்றிலும் இந்து மத தெய்வங்களின் உயர்வை எடுத்துகச் சொல்லியிருக்கிறார் அகத்திய மா முனிவர்

                       அடுத்து பட்டினத்தார் பாடலை எடுத்துக் கொண்டால் பட்டினத்தார் ஒரு இந்துவாக பிறந்து நல்ல சிவ பக்தானாக வாழ்ந்து சிவனடியை சேர்ந்தவர். சிவனின் பெருமைகளை அவரின் பாடல்களில் மிகச் சிறப்பாக சொல்லிருப்பவர். இவர் யேசுவை வழிபடுங்கள் என்று சொல்லியிருப்பது நம்பமுடியாதது. கீழ்த்தரமான பிரச்சார யுக்தி.

                        பாவிகளை இரட்சிக்க முடியாமல் போனவர் மீண்டும் உங்களை இரட்சிப்பார் என கனவு கண்டு காத்திருப்பது என்ன வேடிக்கை. நீங்கள் மட்டு;ம் கனவுடன் காலம் தள்ளுவது மட்டுமில்லாமல் அடுத்தவரையும் அழைப்பது மிகமிக வேடிக்கையாகும்.
                        பிற மதங்களை இழிவுபடுத்தாமல் எங்களின் மதக்கருத்துக்களை மட்டும் கூறி நம்புபவர்களை சரியான பாதையில் வழி நடத்தவே நாங்கள் விரும்புகிறோம். இதற்கு உதாரணம் ஜெர்மணி நாட்டிலிருந்து இந்தியா வந்தவர் இந்து மதத்தின் உண்மைகளைப்புரிந்து கொண்டு வீரமாமுனிவர் ஆகி இந்து மதத்திற்கும் தமிழிற்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றியது.
                      தற்காலத்தில் அமரிக்கரான சுவாமி தந்திரதேவா இலங்கையில் ஒரு இந்து சமய சங்கத்திற்கு தலைவராக இருப்பது.
                      மற்றும் ஜேசு கிறிஸ்து பாவிகளே என்னிடம் வாருங்கள் என்று பாவிகளை தான் அழைத்தார்கள். எனவே மற்ற மதத்தினர் எல்லாம் பாவிகள் என்று நினைத்தா நீங்கள் அழைக்கிறீர்கள்.
                      ஜேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு 13 ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்ன செய்தார் என ஆராய்ந்து பார்த்து நீங்கள் எழுதியுள்ளது போல் மனச்சாட்சியுடன் நல்ல முடிவு எடுங்கள். புதிய பழைய ஏற்பாடுகளிலிருந்து நிறைய ஆதாரங்களை எங்களால் தரமுடியும். அதை நாங்கள் விரும்பவில்லை. இப்படியொரு பதிலினை உங்களின் சிலவார்த்தைகளினாலேயே எழுதநேர்ந்தது. தயவு செய்து இப்படிப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கி எங்களையும் உங்களைப் போல் உங்கள் மதத்தை மட்டப்படுத்தி மூன்றாம் தரப்பிரச்சாரம் செய்ய தள்ளி விடாதீர்கள்.


 
Mithraa Samy..SMP.DA    

 

 

 



                          Home                                   [C] Copyright 2004-2008           www.Aanmegam.com                            CONTACT