|
அர்த்தமுள்ள இந்து மதம்
சில இந்துப்பெரியவர்கள் கடவுளைப்பற்றி
எழுதிய சில முக்கிய புஸ்தகங்களில் அர்த்தம் இல்லாமல் இல்லை . ஆனால் அதை
புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள இஷ்டம் இல்லாமல் இருக்கும்
பொழுது தான் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் வணங்குகின்ற தெய்வத்துக்கும்
சம்பந்தமில்லாமல் போகின்றது. கடவுள் ஒருவர் உண்டு என்று எல்லோருமே
ஒத்துக்கொள்கின்றோம்.அந்த ஒருவர் யார் ? அவர் எப்படிப்பட்டவர் ?
கடவுளுடைய தன்மை
கடவுள் பரிசுத்தமானவர், அன்புள்ளவர்,
சர்வ வல்லவர், வானத்தையும் பூமியையும் படைத்தவர். இந்து மக்களின் முக்கிய
வேதங்கள் நான்கு. அவைகளில் முதல் இரண்டு வேதங்கள் கடவுளின் தன்மையைப்பற்றி
மிக தெளிவாக அர்த்தத்தோடு சமஸ்கிருத மொழியில் கீழ்க்கண்டவாறு எழுதி
இருக்கிறது .
ரிக் வேதம் புருஷ சூக்தம்
விஸ்வகர்மா எனப்பட்ட பிரஜாதிபதியாகிய
புருஷன் தன்னையே பலியாக்கி இரத்தம் சிந்தி மனிதர்களாகிய நம்மை மீட்டுக்
கொள்ள வேண்டும்.
சாம வேதம்
சிருஷ்டிகர்த்தாவும் ஜகத்ரட்சகருமாகிய
பிரஜாபதி என்ற மூல புருஷர் தம்மை தாமே பலியிட்டார். என்று மேற் கூறிய
வேதங்களில் எழுதியிருக்கிறது. ஆகவே கடவுளே பூலோகத்துக்கு வந்து தன்னையே பலி
செலுத்தினால் தான் மனுஷர்களின் பாவம் மன்னிக்கப்படும் என்று இந்து
வேதங்களும் கூறுகின்றது. இது மிகவும் சரியானதும் ஒத்துக்கொள்ளக்கூடியதும்
ஆகும். இது சரி என்றால் பாவ நிவாரண பலியாக அவதரிக்க வேண்டிய தெய்வம் வந்து
விட்டாரா ? வந்து விட்டார் என்றால் அவர் யார் ? அந்த தெய்வத்தின் தகுதி
யாது ? செய்து இந்த கேள்வியை நீங்களே கேட்டுப்பாருங்கள். விடை காணுங்கள்.
இந்து மத முனிவராகிய அகஸ்தியர் எப்படிப்பட்ட தெய்வத்தை வணங்க வேண்டுமென்று
எழுதியிருக்கிறார். கவனியுங்கள்.
அகஸ்திய ஞானம் 30- ல் 23. வது பாடல்
வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி
மானிலத்தை ஒரு நொடியில் வகுத்தே
மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்
குவலயத்திற்றானு தித்துக்குவாய் வந்து
கனமான சமுசாரம் ஒன்றிலாமல்
சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப்போட்டு
அகண்டதலஞ்சென்றவரை யண்டுவாயே.
அர்த்தம் :
உலகத்தைப்படைத்த தெய்வம் மனுஷரையும் படைத்து
பின் அந்த மனுர்களின் மத்தியில் மனுஷனாக பிறந்து
மனைவிகள் என்று யாரும் இல்லாமல் சந்யாசி போல
கலியாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து தனக்கென
சீஷர்களை ஏற்படுத்தி, அவர்களிடம் உலகமெல்லாம்
தான் வந்த விவரத்தை அறிவிக்க கூறி சீஷர்களை விட்டு
விட்டு மேலோகம் சென்ற அவரையே சேவிக்க வேண்டும்.
என்று அகத்திய முனிவர் கூறுகின்றார்.
இப்பாட்டின் அர்த்தம் யாருக்கு பொருந்தும்.
கொங்கண மகரிஷி பாடியதை கவனியுங்கள் ...
கடவுளுக்கு பெண்டேது? பிள்ளையேது?
காமகுணலீலை முதலானதேது?
கடவுளுக்கு பகடி சீட்டு தாயமேது?
காடுகளில் வேட்டைகட்கு திரிவதேது?
கடவுளுக்கு காமிகளின் தொழிலேயில்லை.
காருண்யத்தொழில் ஒன்றே கடவுள் பாரம்.
கேள்வி : நீங்களே கேட்டுப்பாருங்கள்.
கலியாணம் செய்யாத தெய்வம் யார் ?
உண்டு என்றால் அந்த தெய்வம் தான் உலகத்தை உருவாக்கியவர் என்று கூறமுடியுமா?
மனுஷருடைய பாவத்தை போக்க, மன வேதனைகளை நீக்க
மீனாகவோ, பன்றியாகவோ, யானையாகவோ அவதரிப்பதால்
மக்களுக்கு என்ன லாபம்.?
தயவுசெய்து கோபிக்காமல் நீங்களே சொல்லுங்கள் !
இந்து மக்களின் சிறந்த பக்தரான
பட்டினத்தார்
பாடிய பாடலை கவனியுங்கள்
கல்லதை வெள்ளியை செம்பை
களிமண்ணால் மதியிட்டுருவெனக்குயவன்
கட்டிய கோலமும் கருதேன்
வல்லிரும்புக்கால் வெண்கலத்தகட்டால்
மற்றலி பஞ்ஜ லோகத்தால்
வார்த்து அடித்து வைத்ததுமான
வஞ் சிலைகளையும் மதியேன்
செல்லரிக்காத மரத்தினை தெரிந்து
சித்தர் வேலைகள் செய்து
சிறந்த பொம்மைகளை பற்பபல படங்கள்
சிந்தையிற் கனவிலும் மதியேன்
எல்லைபால எனக்கினி ஆகாது
உமக்கு நான் அடிமை
எந்தன் இயேசு நாயகனே
இதை வாசிக்கும் அன்பர்களே
மேலே நீங்கள் நீங்கள் படித்த பாடல்கள்
கிறிஸ்தவ பாடல்கள்
இல்லை .
நீங்களே படித்து அறிந்ததுமான
இந்துமத பக்தர்களே எழுதியிருக்கிறார்கள். இதை தர்க்கத்துக்கு எழுதாமல்
அறிவுள்ள உங்கள் யோசனைக்கு விட்டு விடுகிறேன்.
ஒன்றை மட்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மரிக்கும் முன் உண்மையான
தெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள். அப்பொழுதே மோட்ச பாக்கியம் கிடைக்கும்.
உங்களுக்காக உங்கள் பாவங்களுக்காக சொர்க்கத்திலிருந்து இறங்கி மனுஷனாக
அவதரித்துதன் இரத்தம் முழுவதையும் கிரயமாக கொடுத்து
பலியாகி மரித்து, தெய்வ லட்சணத்தின்படி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த அந்த
ஒரே பரிசுத்த தெய்வமாகிய இயேசு பிரானை உங்கள் குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு
பாவம் நீங்கி சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் வாழ்வீர்களாக.
- குறிப்பு -
நாங்கள் உங்களுக்கு கிறிஸ்தவ வசனங்களை உதாரணங்களாக காட்டவில்லை.
இந்து பக்தர்களின் கருத்தைத்தான் எழுதி இருக்கிறேன்.
இந்துமத உபதேசம் அல்ல. கிறிஸ்தவம் ஒரு மதமும் அல்ல. கிறிஸ்தவ பெயர்
வைத்துக்கொண்டாலும்
கிறிஸ்தவர் மதத்தில் சேரந்தேன் என்றாலும் நீங்கள் மோட்சம் போக முடியாது.
இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் உபதேசத்தை கைக்கொண்டால் நிலையான சந்தோஷமும்
சொர்க்க பாக்கியமும் அடைவோம்.
- அன்பர்களே -
இதைக்குறித்து உங்களுக்கு என்ன சந்தேகமானாலும் மனம் விட்டு கேளுங்கள்.
பதில் எழுதுகிறேன். உங்கள் கவலைகளை இயேசு நீக்குவார். வியாதிகளை
சுகமாக்குவார். உலகம் தராத சமாதானத்தை இயேசு தருவார். இயேசு மட்டுமே உங்கள்
பாவங்களை மன்னிக்க அதிகாரம்உள்ளவர். இயேசு நல்லவர். உங்களுக்காக
ஜெபிக்கிறோம். இயேசு நேசிக்கிறார்.
|