|


அன்பே
சிவம்...Om Namasivaya
பெங்
சூயி
FENG SHUI
(சீன
வாஸ்து முறை). பெங் என்றால் காற்று.
சூயி என்றால் நீர்.
ஓரு கட்டிடத்தின் அமைப்பை மாற்றாமல் பல வண்ணங்களில் பலவித
பொருட்களை வைத்து வாஸ்து குறைபாடுகளை நீக்கி வீட்டில்
அமைதி, சந்தோசம் நிலைபெறச் செய்வதே இம்முறையாகும். கல்யாணம்
பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பது முதுமொழியாகும்.
வீடு கட்டும் போது சிறந்த இடம்தானா? சரியான அமைப்புதானா?
சாஸ்த்திரப்படி என்ன அமைப்பு? என்பதை பார்த்துக் கட்டவேண்டும்.
அப்படியில்லாமல் கட்டிய வீட்டிற்கும், அப்படியே வாங்கிய
வீட்டிற்கும் வாஸ்து குற்றங்கள் இருப்பின் அதை எப்படிச்
சரி செய்வது என்பதை கூறும் முறையே பெங்சூயி ஆகும்.
சரியான வாஸ்து
முறைப்படி கட்டாத வீடு குடும்பத் தலைவரையும், வீட்டில்
இருப்பவர்களையும் மிகவும் கடுமையாக பாதிக்கிறது. நோய், எவ்வளவு
சம்பாதித்தாலும் பணத்தட்டுப்பாடு, என்ன இருந்தும் மன
அமைதியின்மை, குடும்பத்தில் அடிக்கடி தேவையில்லாத சண்டை சச்சரவு
என பல வழிகளில் பாதிக்கிறது என்பது நாம் இன்று கண்கூடாக
காண்கிறோம். மேலை நாட்டவர் கூட இன்று இதை ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
வீடு கட்டுவதானாலும்,
வீடு வாங்குவதானாலும் சரி ஓரளவிற்காவது வாஸ்து அமைப்பை பார்த்து
வாங்குங்கள். வாஸ்து குறைபாடில்லாத வீட்டில் வாழ்வது சகல
சௌபாக்கியங்களையும் அள்ளித் தரும்.
ஜோதிட ரீதியாக பார்த்தோமானால், லக்கினத்திலிருந்து
நாலாமிடம், நாலாமிடத்து அதிபதி, அவரிருக்குமிடம், செவ்வாய்,
அவரின் ஆதிபத்தியம் என பல வழி முறைகளின் அடிப்படையிலேயே
வீடு கட்டவேண்டும். ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தினர்
இருந்தால் ஒவ்வொருவர் அமைப்பிற்கும் ஒவ்வொரு விதமான வீட்டின்
அமைப்பு அமையும். இதில் குடும்பத் தலைவரின் ஜாதக அமைப்புப்படியே
வீடு அமைக்கவேண்டும்.
இந்த நிலையில் மற்ற
அமைப்பிலுள்ள அடுத்த அங்கத்தினரிற்கு அசௌகரியம் வராமல்
தடுக்கும் ஒரு பொதுவான வழிமுறையே வாஸ்து சாஸ்திரமாகும்.
அது அதன் இஸ்டத்திற்கு வருவதே அதிஸ்டமாகும். அதிஸ்டங்கள்
பல வகைப்படுகின்றன. 1. கர்மாவினால் வரும் அதிஸ்டம். 2;. மண்ணினால்
வரும் அதிஸ்டம். இப்படி பல வகைப்படும். இதில் கர்மாவினால்
வரும் நல்லது கெட்டதை ஜோதிட ரீதியாக கிரகங்களை ஆராய்ந்து
மாற்றிக்கொள்ளலாம். என்ன தான் கிரக அமைப்பினை நாம் சரி செய்தாலும்
வசிக்கும் இடத்தின் குறைபாடு சரிசெய்யப்படாவிட்டால்
முழுமையான சந்தோசத்தினை நாம் அனுபவிக்க முடியாது. மண்ணினால்
வருவது என்பது நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பினால் வருவது.
இதனை நமக்கு அதிஸ்டம் தரும் அமைப்பாக மாற்றுவதே வாஸ்து
முறையாகும்.
இதில் இந்து சமய
முறைப்படி சித்தர்களினால் அருளுப்பட்ட வாஸ்து பரிகாரச் சக்கரம்,
ரசமணி, மகாமேரு போன்ற பரிகாரப் பொருட்களினாலும், சீன
முறையான பெங்சூயி முறையில் அதிஸ்டக் கண்ணாடி, வின்ட் சிம்(wind
chim) எனும்
மணி, சிரிக்கும் புத்தர்(laughing
Budda)
சிலைகள் போன்ற பல பொம்மைகளினாலும், பல வண்ண படங்களினாலும்
நாம் குடியிருக்கும் வீட்டை நமக்கு அதிஸ்டம் தரும் வீடாக
மாற்றிக்கொள்ள முடியும்.
1. சிரிக்கும் புத்தர்
-
சிரித்த வண்ணம் இருக்கும் (laughing
Budda) புத்தர்
சிலை செல்வக் கடவுளாகும். இவரை வீட்டில் வைப்பதனால் பணத்தட்டுப்பாடு
நீங்கி வீட்டில் செல்வம் கொழிக்கும். இவரில் பல வகை உண்டு.
சந்தான விருத்தி, போசனம் என 6 வகை உள்ளது. 6 வகையும் சேர்த்து
வீட்டில் வைப்பதே சிறந்தாகும்.
2. அதிஸ்ர்ட தேவர்கள்.
-
லுக்(Luk)பக்(Fuk)சௌ (Sau) ஆரோக்கியம், செல்வம், ஆயுள்,
இவற்றிற்கு அதிபர்களாகுகின்றனர். இவர்களின் சிலைகளை வீட்டில்
வைப்பதனால் வீட்டில் குதூகலம் பொங்கும்.
3. ஜோடித் தாராக்கள்.
-
தாரா கற்பிற்கும், காதலுக்கும் அடையாளம். வண்ணச்
சிறகுகளையுடைய ஆண், பெண் தாரா ஜோடிகளின் படத்தை அல்லது
சிலைகளை வீட்டில் வைப்பதனால் கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம்
கூடும்.
4. சீனத்து புறாக்கள்.
-
ஒருவகை உயர்தர மரத்தினால் இந்த சீனத்து புறாக்கள் (Manderin
Doves) செய்யப்படுகின்றன.
ஒரு ஆண் புறாவும், ஒரு பெண் புறாவும் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில்
இணைந்திருக்கும். இந்த பொம்மையை வைப்பதினால் முரண்பட்ட
கருத்து வேற்றுமையுள்ள கணவன் மனைவியரிடையே கருத்தொற்றுமை
நிலவும். குடும்பத்தில் வரும் சண்டை சச்சரவுகள் குறைந்து
மகிழ்ச்சி நிலவும். மற்றும் திருமணத்தடை உள்ளவர்களிற்கு இத்தடை
நீங்கி திருமணம் கைகூடும். கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை
ஒருபோதும் வைக்கக்கூடாது.
5. பீனிக்ஸ் பறவை.
-
இறந்த பின் எரியூட்டிய சாம்பலிருந்து உயிர் பெற்று எழக்கூடிய
இந்த பறவை 500 ஆண்டுகளிற்கு முன்பு கிரேக்க தேசத்தில் உயிர்
வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பறவையின் படம், சிலைகளை
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைக்கலாம். இதனால் நீண்ட
ஆயுள், வருங்காலத்தை கூர்ந்தறியும் ஆற்றல் கிடைக்கும்.
6. அதிஸ்ட ஆமை.
- இதனை வீட்டில் வைப்பதினால் வீட்டில் உள்ளவர்களின் ஆயுள்
அதிகரிக்கும்.
7. மூன்று நாணயங்கள். - செப்பினால் செய்யப்பட்ட இந்த நாணயங்கள் வட்ட வடிவமாக
நடுவில் சதுரமான துளையுடையதாக நான்கு பக்கமும் மந்திர எழுத்துக்கள்
எழுதப்பட்டதாக இருக்கும். இதனை வைத்திருப்பதனால் பணம்
பெருகும். அதிஸ்டம் உண்டாகும்
8. மூன்று கால் தவளை.
-
3 கால்களையுடைய இந்த தவளை வாயில் அதிஸ்டக் காசுகள் மூன்றினை
கவ்வியபடியிருக்கும். இதுவும் செல்வச் சிறப்பிற்கு ஒரு
கருவியாகும்.
9. ஒற்றைக்கொம்புள்ள
குதிரை
-
யுனிக்கோர்ன்
(Unicorn)
என அழைக்கப்படும் இந்த குதிரையின் படத்தினை வைப்பதினால்
குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம், ஆயுள் பெருகும். ஆண் சந்ததி
விருத்தியாகும்.
10. பிரமிட்டுகள்.
-
பிரமிட்டுகளில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தியுண்டு.வெள்ளை-
மனஅமைதி. பச்சை- கணவன் மனைவி அன்யோன்னியம். சிகப்பு- விஷத்தன்மையை
அகற்றும். மஞ்சள்- மகிழ்ச்சிபெருகும். பொருள் சேரும்;.
நீலம்- நோயற்ற தன்மை, தன்னம்பிக்கையை வளர்க்கும். ஏழு நிற
தொங்கும் பிரமிட் சகல சௌபாக்கியங்களையும் தரவல்லது.
பெங்சூயி இருவகை காற்றினைப்பற்றி சொல்லுகிறது. ஒன்று சி (Chi)
எனப்படும் அமுதக்காற்று.மற்றது ஷா (Sha) எனப்படும் விஷக்காற்று.
எப்பொழுதும் அமுதக்காற்றே நமது வீட்டில் இருக்குமாறு நாம்
பார்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு நல்ல சாம்பிராணி துர்பம,;
நல்ல மணமுள்ள ஊதுபத்தி (சந்தனகுச்சி) ஆகியவற்றை பொருத்த
வேண்டும்.வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலாவது கண்டிப்பாக வீட்டிற்கு
சாம்பிராணி தூபம் இடவேண்டும். தனிச் சாம்பிராணி இடாமல் சாம்பிராணி,
வெண்குங்கிலியம், சுத்தமான சந்தனம், அகில், தேவதாரு, பச்சைக்
கற்பூரம் ஆகியவற்றை கலந்து பொடிசெய்து தூபம் போடுவது
மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
குளியலறை (Bathroom)
கழிவறை(Toilet) வாயில்களில் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில்
சுத்தப்படுத்தப்படாத கல் உப்பினை நிரப்பிப் போட்டு வைக்க
வேண்டும். இதை வாரம் ஒருமுறை மாற்றிவிட வேண்டும். வீட்டின்
தலைவாசலின் இருபுறமும் கல்லுப்பினை இரவில் ஒரு சிறிய கண்ணாடிப்பாத்திரத்தில்
வைத்து காலையில் அதை குப்பையில் கொட்டிவிடவும். இது வீட்டிலுள்ள
எதிர்மறை சக்திகளை அழித்து நல்ல சக்திகளை பெருக்கும்.
மஞ்சள், சந்தனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை சக்திகளை அகற்றும்
ஆற்றல் உள்ளது. இவற்றைக் கரைத்து வீட்டின் ஜன்னல், கதவு
போன்ற இடங்களில் தெளித்து விட்டால் தீய சக்திகள் விலகும்.
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்குவதற்கு சில பயனள்ள பெங்சூயி தகவல்கள்.
1. சீன தேசத்து மூன்று மந்திர நாணயங்களை ஒரு சிகப்பு
நாடாவினால்க் கட்டி அதை உங்களின் கைப்பை(Hand
bag), பணப்பை(Money
purse), உங்கள் வீட்டின் பணப்பெட்டி ஆகியவற்றில் போட்டு
வைக்கவும். இது குறைவில்லாத தொடர் வருமானத்தை குறிப்பதாகும்.
அத்துடன் உங்கள் வீட்டின் தலைவாசற் கதவின் உட்புற
கைபிடியில் கட்டி தொங்க விட்டால் வீட்டினுள் அதிஸ்டத்தை
அழைக்க இது உதவும். எக்காரணத்தைக் கொண்டும் பின்புற வாசல்
கதவில் கட்டி தொங்கவிடக்கூடாது.
2. இயற்கை சக்திகள் (பெங்சூயி இயற்கை சக்திகளாக நீர், நிலம்,
அக்னி, மரம், உலோகம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது ஆனால் இந்து
மதம் நீர், நிலம், அக்னி, காற்று, ஆகாயம் ஆகியவற்றையே பஞ்ச
பூதம் என்று இயற்கை சக்திகளாக குறிப்பிடுகிறது) உங்கள்
உடலில் அல்லது உங்கள் சுற்றுப்புறத்தில் ஒரு சீராக இருக்குமாறு
பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் ஏதாயினும் என்று கூடியோ
குறைந்தோ போனால் அது உங்களை பாதிக்கும்.
3. ஒருபோதும் ஜன்னல், கதவிற்கு புறமுதுகு காட்டி உட்காராதீர்கள்.
எப்போதும் ஒரு நிலையான சுவரின் முன்புறம் உட்காருங்கள். உங்கள்
வீட்டின் வரவேற்பறையில் நாற்காலிகளை வைக்கும் போது இதை
அனுசரித்து வைக்கவும். அத்துடன் அமுதக்காற்றானது வீட்டினுள்ளேயே
சுழலும்வண்ணம் மேசை, நாற்காலிகளை ஒழுங்கு செய்யவும்.
4. தலைவாசலிற்கு நேராக கீழிறங்கும் மாடிப்படிகளை அமைக்காதீர்கள்.
அப்படி இருப்பின் வாசல் வழியே உள்ளே வரும் செங் சீயி (Sheng
Chi – Possitive energy)
எனப்படும் அமுதக்காற்று வீட்டினுள் வராமல் மாடிப்படி வழியே
மேலே சென்று விடும். அல்லது மாடிப்படி வழியாக வரும் அமுதக்கதற்று
வீட்டினுள் வராமல் தலைவாசல் வழியே வெளியே சென்று விடும்.
இதற்கு பரிகாரமாக ஐந்து குழல் கொண்ட காற்றில் ஒலியெழுப்பும்
குழல் மணியை(wind
chime)
தலைவாசலின் பின்புறம் கட்டித் தொங்க விடலாம். இந்த மணிகள்
நட்சத்திரம், சந்திரன் போன்ற எந்த ஒரு படமும் இல்லாமல்
தனியே ஒரே நிறமுடையதாக இருக்கவேண்டும்.
5. தலைவாசலின் இருபுறமும் சப்பாத்து, செருப்பு (shoes
and slippers)
போன்றவற்றைக் கழற்றி விட வேண்டாம். எப்பொழுதும் தலைவாசலின்
இருபுறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும். இல்லாவிட்டால் வீட்டினுள்ளே
வரும் அமுதக்காற்று சப்பாத்து, செருப்பு ஆகியவற்றில் இருக்கும்
தீயசக்திகளை எடுத்துக்கொண்டு வஷக்காற்றாக மாறி நமக்கு
தீமையைத் தரும்.
6. தலைவாசலின் அருகில் குளியலறை, கழிவறை ஆகியவற்றின்
வாசல் இருக்கக்கூடாது. மற்றும் தலைவாசலிற்கு நேர்எதிரே இவற்றின்
வாசல் இருப்பதும் தவறாகும். குளியலறை, கழிவறையே எதிர்மறை
சக்தி(தீய சக்தி உற்பத்தியாகும் முக்கிய இடமாகும்)இதனால்
வாசல் வழியே வரும் நல்ல சக்தியானது இவற்றின் வடிகால் முலம்
வெளியேறவோ அல்லது அந்த நல்ல சக்தியுடன் அந்த தீய சக்திகள்
கலந்து அதனை அசுத்தப்படுத்தி நமக்கு தீய விளைவுகளைத் தரலாம்.
இதை தகுந்த முறையில் மாற்றி அமைத்துக்கொள்ளவும். குறிப்பாக
தடுப்புகள் வைத்துத் தடுக்கலாம். அல்லது அறைகளின் வாசலை
மாற்றி அமைக்கலாம். கண்டிப்பாக குளியலறை கழிவறைகளின்
கதவுகளை எந்நேரமும் சாத்திவைப்பது மிகமிக அவசியமாகும். இது
நல்ல சக்திகள் வெளியே செல்வதை தடுக்கவும், தீய சக்திகள்
வீட்டினுள்ளே வருவதைத்தடுக்கவும் மிகவும் பயனள்ள வழியாக
இருக்கும்.
தவறு சரி
7. தலைவாசலும் பின்புற வாசலும் ஒரே நேர்கோட்டில் ஒரேபார்வையாக
இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் தலைவாசல் வழியே வரும்
அமுதக்காற்றானது நேரே பின்புற வாசல் வழியே வெளியேறிவிடும்.
வாசல்களில் திரைச்சீலைகளை உபயோகப்படுத்தி இதைத் தடுக்கலாம்.
சிகப்பு, பச்சை வர்ண திரைச்சீலைகள் நல்ல பலனைத்தரும்.
8. தலைவாசல் என்பது ஒரு வீட்டிற்கு மிக முக்கியமான அம்சமாகும்.
இதன் வழியாகத்தான் எல்லாவித நல்ல சக்திகளும், அதிஸ்டமும்
நமது வீட்டினுள் நுழைகின்றன. எனவே வீடு கட்டும் போது
தலைவாசலிற்கு முக்கியத்துவம் தந்து அதை முறைப்படி அமைப்பது
மிகமிக முக்கியமாகும். ஏற்கனவே வீடு கட்டியவர்கள் அதை
முறைப்படி மாற்றிக்கொள்வது அவசியமாகும். தலைவாசலிற்கு
வெளியேயும், உள்ளேயும் எந்தவித தடையும் இருக்கக் கூடாது.
அப்படி இருக்குமானால் அவை எல்லாவித நல்ல சக்திகளையும்
தீயவையாக மாற்றி விடும் அபாயமுண்டு. ஒரு வீட்டின் தலைவாசல்
ஒரு சிறிய காத்திருக்கும் அறையினிலோ, அல்லது விசாலமான
வரவேற்பு அறையினிலோ திறப்பது சிறந்த அமைப்பாகும்.
9. சிலர் தலைவாசலிற்கு எதிரே தீயசக்திகளை விரட்ட என்று ஒரு
நிலைக்கண்ணாடி மாட்டி வைப்பது வழக்கமாகும். இது தீயசக்திகளுடன்
சேர்த்து நல்ல சக்திகளையும் திருப்பியனுப்பிவிடும்.
தலைவாசலிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பதும் நல்லதல்ல.
இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் அந்த சுவரில் ஆழத்தை
அதிகரிக்கச் செய்யும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த படங்களை
ஒட்டி வைக்கலாம். தலைவாசலிற்கு நேர்எதிரே பெரிய மரங்கள் இல்லாதவாறு
பார்த்துக்கொள்ளுங்கள். இது வீட்டினுள் வரும் அமுதக்காற்றினை
தடுத்துவிடும்.
10. தலைவாசலின் பக்கத்தில் ஒருபோதும் வெற்று பாத்திரங்களை
வைக்க வேண்டாம். வீட்டினுள்ளே வரும் அமுதக்காற்றானது அப்பாத்திரத்தினுள்
சென்று தங்கிவிடும். அதனால் வீட்டிற்கு அமுதக்காற்றினால்
கிடைக்கப்பட வேண்டிய நன்மை கிடைக்காமல் போய் விடும்.
11. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில், முதலாம்
மாடியிலிருந்து குடியிருப்பவர்களிற்கு இரண்டு பெரிய
குறைபாடுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று தலைவாசலிற்கு
எதிரே தடுப்புச்சுவர். இது வீட்டினுள் அமுதக்காற்று
நுழையவிடாமல் தடுத்து விடுகிறத. இக்குறையிருப்பவர்கள் அந்த
சுவரில் சிறுதுவாரங்கள் அமைத்து வீட்டினுள் அமுதக்காற்று
நுழைய வழிசெய்யலாம். இரண்டு தலைவாசலிற்கு நேர்எதிரே மேலே
கீழே ஏறியிறங்கும் படிக்கட்டுகள் காணப்படுதல். இது வீட்டில்
இருப்பவர்களிற்கு மிக மிக கூடாத விளைவையே தருகிறது. இதற்கு
தலைவாசலை மாற்றி அமைப்பதே சிறந்ததாகும்.
12. வீட்டில் எப்போதும் மென்மையான இனிய இசை ஒலிக்குமாறு
பார்த்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான இசையை முடிந்தவரை தவிர்த்து
விடுங்கள். வினாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு
கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி மற்றும் சில மந்திரங்களை
மீண்டும் மீண்டும் ஒலிப்பவை என பல ஒலிநாடாக்களும், குறுந்தட்டுக்களும்
கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை காலையில் மட்டும் ஆவது ஒரு
தடவை வீட்டில் ஒலிக்கச் செய்வது சிறப்பாகும்.
இதனை ஏன் கடைப்பிடிக்க வேண்டுமென்ற
ஒரு ஆய்வுக் கட்டுரை மிக விரைவில் உங்களிற்கு தரவுள்ளேன்.
13. இயற்கை வெளிச்சம் வீட்டினுள்ளே எப்பொழுதும் கிடைக்குமாறு
பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி முடியாதபட்சத்தில் ஏதாவது
ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
14. கூரான முனையுடைய பொருட்கள் (அம்பு, விமான பொம்மை) உங்கள்
பிள்ளைகளின் படிக்கும் மேசையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
மற்றும் வரவேற்பறையில் கத்தி, துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றின்
பொம்மைகளையோ அல்லது படங்களையோ தவிர்த்து விடுங்கள். இவை
மிகவும் பாரதூரமான எதிர்மறை அதிர்வலைகளை தரவல்லன.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
வாழ்க வளமுடன்
Mitraasamy SMP.DA
Madurai India
|