|

|


அன்பே
சிவம்...Om Namasivaya
அகத்திய மாமுனிவர் ஞானம் 30
------------------------------------------------------
மெய்ஞான
குருபரனைப் பூசைபண்ணு
வித்தைந்து சற்குருவை நிதமும் போற்று
கையாற மனமாற ஞானம் சொல்லு
காரமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே
பொய்யாத உபதேச குருவைப் போற்றி
புகழாக பன்னிரெண்டு வருசங்காரே.
1
கார்த்தாக்காலோரெழுத்து வழியும் சொல்வார்
கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்ற
பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார்
பரிவாக வாலை மூன்றெழுத்துஞ் சொல்வார்
சேர்த்தாக்காற் லெட்டோடே யிரண்டும் சொல்வார்
சிவஞ் சொல்வார் நாலுக்குமிடமும் சொல்வார்
பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி
பூங்கமலத் திருவடியை பூசை செய்யே 2
பூசையென்ன மானிலமே பூசையாகும்
புரவமையத்தொளி கண்டாலதுவேபோது
மாசையென்ன அற்றவிடங் கடந்த ஞானம்
அம்பரத்தை செய்யதுவே யாசையாகும்
ஓசையென வாசிவைத்து மூலத்தூணி
உயர்ந்து நின்ற சிலம்பொலியே ஆசையாச்சு
ஊசையென்ன பலவகையு முற்றுப்பார்த்தால்
பகட்டாத சொரூபத்தாற் பணிய நன்றே 3
நன்றானரேசகத்தை முன்னே கேளு
நலமான பூரகத்தை வாங்கிக் கொள்ளு
வொன்றான கும்பகத்தை யுற்றுப்பாரு
உண்மை யென்னவிடங்கேளு வுறுதிகேளு
பன்றாகபழகுவதுக் கடிகை கேளு
பதிவுசொன்னால் மூன்றுக்கும் வடிவு கேளு
குன்றானமூன்றுக்கும் குறிகுணங்கள் சொன்னால்
குருவுக்குவடலாவி பொருள் தத்தம்பண்ணே 4
பண்ணிநின்றவுடலாகு முயிர்தானாகும்
பகருகின்ற பொருளாகுவுற்றாராரு
நண்ணிநின்ற குருவாரு பரந்தானாரு
நலமானவகார மாறும்பாரு
கண்ணில்நின்றவொளிபாரு வெளியைப்பாரு
காலடங்கிவாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில்நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி
வேதாந்தசித்தாந்த மிரண்டும்பாரே 5
வேதாந்தசித்தாந்த மிரண்டுமென்ன
மேன்மையுள்ள பெரியேர்க்கு மெல்லாமொன்றே
நாதாந்த நடனவொளி கண்டபேர்க்கு
நானென்றவகம் போச்சு யெல்லாம் போச்சே
போதாந்தம் பொக்கிசமாம் வாமபூசை
பூசித்துக்கும்பித்து வுள்ளே ரேசி
கீதாந்த வொளியேழும் நாதங் கேட்கும்
கிருபை தருமுனற்றிய மனத்தைக்கட்டே 6
மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம்
மதியிரவி யண்டபிண்ட மானவாறும்
மனந்தானே சக்திசிவ மாய்கை ஞானம்
வாசிபார் தேசிபர பிரம்மம்யாவும்
மனந்தானே நாதவிந்து அரூபரூபம்
வளிகனல் விண்புனல் பண்புனல்மண்ணானவாறும்
மனந்தானேவுதிக்குமிட மொடுங்குமிடமிரண்டும்
வகைசொல்லுஞ் சற்குருவை வணங்கிக்கேளே 7
கேளப்பாவங்கென்று வுள்ளேரேசி
கேடியாகசிங்கென்று வுள்ளேபூரி
ஆளப்பாஅங்கென்று வுள்ளேகும்பி
ஐம்-ஓம்-சிம்-யம்மென்று தியானம் செய்வாய்
சூளப்பாசுழிமுனை கண்ணொளியையேற்ற
சொல்லுகிறேன் அம்-உம்-சிம்-வம்-ஓமென்று
வாளப்பா ஓம்-ஐயங்-கிலியுங்-சவ்வுங்-வாசி
வாலையாமும்பறையே சிவாவென்றென்னே 8
என்னவே ரேசகங்தான் முப்பத்திரண்டு
யியலானபூரகந்தான் பதினாறாகு
முண்ணவேகும்பகமே யறுபத்துநாலு
முயர்ந்துநின்ற பிராணாயாமங் குருசொற்கேட்டு
பின்னின்றதசநாடி தாரணையேயானாற்
பிலமறிந்துசையோக நிலையைப்பற்றி
கண்ணில்நின்ற யிடமறிந்து வாமபூசை
கருவான சிவயோகங் காணலாச்சே 9
ஆமென்றும்ஓமென்றும் வங்-யங்-ஓம்-யவசிமந வென்று
ஐந்தெழுத்தைமாறி வுச்சரிக்க வேணும்
வாமென்றவிடகலையில் சிங்-வங்-யங்நங்-மங்-ஓம்-நமயவசி யென்று
வளமையுடன் சிகாரமதையறிய வேணும்
தூமென்றசுழிமுனைக்கி ஓம்-மங்-நங்-யங்-வங்-சிங்
ஓம்-சிவயநம வென்று சூட்சமாய்நகாரத்தையறியவேணும்
தாமென்றமவுனத்தால் தியானஞ்செய்து
சதாசிவமாம்சுழிமுனையி னொளியைப்பாரே 10
பார்க்கையிலே பவளவொளி பச்சைநீலம்
பருவான பொன்பசுமை வெண்மையைந்தும்
சேர்க்கையிலே சூரிய னுதயம்போல
செகசோதி பூரணத்தின் காந்தி தானும்
ஆர்க்கையிலேகொடுத்த பொருள் வாங்குமாப் போல
ஐந்துருவுமொன்றான வடிவேதோணுங்
காப்பதுதபன் திருவடியே சரணமென்று
காத்தவர்க்குத்தீங்கில்லை கருணைதானே 11
கருணைதருமக்கினியாதித்தன் சந்திரன்
கலந்தொன்றாய்நின்றது பூரணமேயாகும்
பொருள்நயமாயறிபவனே புண்ணியவானாகும்
புகழ்சொன்னசற்குருவே யாசானாகும்
அருள்கிரணசோதியதா யுதிக்குமெலே
வாயித்தெட்டிதழ்மேலே யமிர்தகர்ப்பந்
திருவறிந்துவுண்டவனே சிவயோகியாகுஞ்
சிவசிவாகாலறிந்தோன் சித்தனாமே 12
சாகாதகாலை நன்றாய் காணவேணும்
தணல்வேகாததலையறிந்து கூடவேணும்
போகாதபுனலறிந்து வுண்ணவேணும்
பொருளறிந்தசற்குருவைபோற்றவேணும்
வாகாகமூன்றரையுந் தன்னுக்குள்ளே
வகைதெரியலட்சியத்தை வணங்கிக்கேளு
ஆகாதுவொன்றுமில்லை யெல்லாமாகும்
அதைரியமிலாப்பொருளாகுஞ் சகலசித்த 13
சித்தென்னசிற்றின்பம் பேரின்பமென்ன
செல்காலம்நிகழ்காலம் வரும்காலமென்ன
சித்தென்னசித்தினுட லானந்தமென்ன
சடமென்னபொருளென்ன வுயிர்தானென்ன
வித்தென்னமரமென்ன வேர்தானென்ன
வெள்ளியென்ன தங்கமென்னலோகமென்ன
பத்தென்னயெட்டென்னயிரண்டுமென்ன
பரமரகசியமான விந்தைகேட்டே 14
விந்துகட்டசுழிமுனைகண் ணொளியைப்பாரு
வழிரேகையைப்பாரு சுழியைப்பாரு
அந்தவட்டத்தோங்கார மதனைப்பாரு
ஐந்துபஞ்சாட்சரத்தைப்பாரு
வுpந்துவிட்டுப் போகாதே விந்தைக்கட்டு
விதரணையாய்தோமுகத்தி லிருந்துபாரு
விந்தைவிட்டால்யோகிகட்குச் சலனம்விந்து
விடாமலே வேதாந்தக் கயிறிற்கட்டே 15
கட்டுவதுமூன்றோடே றைந்தைச்சேரு
கலந்தெட்டுத்தன்னோடே யிரண்டைச்சேரு
ஒட்டுவதுசத்துடனே வொன்றைச்சேரு
வுறதியாய்சேர்த்தபின்பு வோக்கச்சேரு
மூட்டுவதுதுலாசந்தா னடங்கிற்றானால்
முனையோடுசுழியாணி யாதாரந்தோணும்
சட்டமுடன்லட்சதீட்சை நன்றாய்கேளே
சாரமறியபூரண நூல் தன்னைப்பாரே 16
நூல்பாருகொங்கணவர் கடைக்காண்டத்தின்
நுணக்கமெல்லாமதிற்றோணும் பூசைதீட்சை
பால்சீனிபழந்தேன்கற்கண்டு வைந்துமாகும்
பால்திரட்டுயுண்டருசி போலேகாணும்
மூலகுரு மந்திரமு மமிர்தந்தன்னில்
மூட்டினார்நியாயவகை யெல்லாஞ்; சொன்னார்
கால்பாருதலைபாரு புனலைப்பாரு
கண்காதுமூக்கி துவாய்க் கண்டவாரே 17
கண்டத்தில்நின்றசித் தரியைப்பாரு
கண்புருவத்திடைவெளியி னொளியைப்பாரு
அண்டத்தில்வெளிதோன்றும் நடுவேநின்ற
அங்குமிங்குமெங்குநின்ற வடவைப்பாரு
சண்டமாருதம்போன்ற காலினாலே
தட்டிவிடுயகர அஸ் வலகரனைப்பற்றி
துண்டத்தின் முனைபாரு குண்டலியைப்பாரு
சுதமான மூலாதாரம்பாரே 18
ஆதாரமூலவட்டத் தம்பம்பாரு
அறிமுகவனட்சரத்தைக் கண்டுதேரு
வேதாவிமாலுடையயெழுத்தைக்கண்டால்
வெட்டவெளி யாங்காரக் கம்பந்தோணும்
சூதாகமானிடற்கு யென்றும்வாசி
சூட்சமா-யங்-வங்- கென்றுந்தியானி
பாதாரமேகெதி ஓம்-அங் கென்றூணு
பதியிலேவங்-கங்கே யெழுத்தைநாட்டே 19
நாட்டப்பாபாழ்வெளியில் பசும்பொன்பச்சை
நாடியிடைபின்கலையுஞ் சுழியேசுத்து
வோட்டாப்நந்திகம்பத் தொளியைப்பாரு
ஓங்காரமுங்கொண்ட சிங்-வங் கென்று
ஈட்டப்பா-யம்-மம்-மென்றெண்ணி
யியங்குகின்றமூலத்தின் படியைநாட்டி
ஆட்டப்பாவைங்கோண மேலேவட்டம்
அதன்மேலேநாலிதழி னெழுத்தைமூட்டே 20
மூட்டியேவாசிவைத்து பிராணாயாமஞ்செய்ய
மூலகணபதியும் வல்லபையுஞ்சித்தி
சூட்டியேஅத்தயடி மூலங்கண்டாற்
சொல்வதென்னசகலசித்து மதின்மேற்பாரு
பூட்டியேபிருதிவப்பா சவாதிட்டானம்
பொன்னிறமாம்நாற்கோண மிதழாருக்கும்
தாச்டிகமாய்வரசித்து ஓம்-நம் மென்று
சாதகமாய்பிராணாயந் தாக்கநன்றே 21
நன்றானநான்முகனுஞ் சரஸ்வதிங்காணும்
நாடோறுஞ்சந்துச்டி நினைக்கலாகும்
நன்றானும்நடமெத்த வாலைபூசை
அந்திசந்திஉச்சியிலு மடைவாகச்செய்து
ஒன்றானபிரமநிறம் பொன்னதாகும்
ஓகொகோகுலையத்தோர் காணார்மான்பர்
மன்றானமணிப+ரகம் யிறைபோல்நிற்கும்
விட்டத்தின்பத்திபத்திழ்தான் மாயனாமே 22
மாயனாம்பூரந்தான் மயங்குவாண்
ராமசீதாலட்;சுமியுமாலும் பாரு
ஆயனாம்பச்சைமா கமலமேனி
மாயனோடுஅரனைப்போற் காந்தியாகும்
தூயமாம்புரியவட்டம் வாசிதேசி
யுயிர்க்குசுகமாந்தி ஆலம்பொசிப்பாய்
ஞாயமாம் ஓம்-வம்-மம்-உமாவென்று
நாட்டமாம்பிராணாய வரிசையாமே 23
வாசித்துங்கெணசித்தும் வாலேசெய்தார்
பரிசையாய்நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
பத்திமுத்தியாய்மனதில் செபிக்கவேணும்
உரிசையாயியுணர்வுபற்று வதற்குமெலே
ருத்திரனார்முக்கோணவட்டமேலே
சுரிதையாய்ப்பனிரெண்டு யிதழேநிற்கும்
சத்துருத்திரிருத்திரனார் தன்னைக்கானே 24
தன்னைத்தான்காணவே அம்-உம்-ஊம்-ஆம்மென்று
சார்வாகவாசியொடு ரேசியாதே
உன்னைத்தானறிவிக்குஞ் சங்காரகர்த்தன்
வுருக்காட்டுமஞ்சுரிநாமம் பசுமைநீலம்
ஆன்னந்தான் அனாகதமாஞ் சுழித்தவீடு
வறிவானநினைவுக்குள் லிங்கம்பீடம்
பின்னைத்தானிதுவன்றி வேறேயுண்டோ
புரிதுசொல்லக்கூடாது சின்மயமாமென்றே 25
சின்மயத்தின்செயலறிவார் சித்தர்முத்தர்
தேசிகருமநவமுனிக ரிசிகளாகும்
டீபான்மயத்தின்செயலறிவார் வாதிசமுசாரி
விழிராசர்வசியமுதல் யோகிசித்தர்
மின்மயத்தின்விசுத்தியறு கோணம்நிறங்கறுப்ப
மேல்வட்டமீரெட்டு யிதழேயாகும்
துன்மயத்தின்ரோபவமா மகேசுவரனும்
மகேசுவரியானவம்பிகையின் ரூபங்களே 26
அம்வகையையறிவதற்க அம்-உம்-ஓம்-வம்-யம் மென்று
அழகானகால்மடக்கி யோகங்செய்ய
தம்பிகையாம்பதியின்கோடி யீசன்காந்தி
தாய்காந்திஅருணனொளி கோடிக்கொம்பரம்
நம்பினபேர்க்கெந்நாளு மழியாசித்தி
நவகோடிநாதாக்கள் தெரிசனையேயாகும்
உம்பரோடவிளையாட கௌனசித்தி
வுயர்ந்தநின்றகாயசித்தி யுருதியாமே 27
உறுதியாம்ஆக்கினை சக்ரவட்டம்
உள்ளரணடிதழாகுங் கருப்பவண்ணம்
சோதியாமாகாயம் மனுக்கிரகந்தோற்றும்
புகழா இம்-உம்-ஊம்-ஆம் மென்ற
திருவாலெட்சியத்தால் யோகஞ்செய்ய
செய்யவேசதாசிவனுந் தெரிசிப்பார்பார்
அறுதியாமனோன்மணியா ளம்மையாஞ்சித்தி
ஆவிரமென்னுமிரவிமதி போலொளியாங்காணே 28
ஒளியதுகாணிரண்டுமொன்றாய்ச் சேருசேரு
வுற்றுப்பார்புருவத்தி லூணிப்பாரு
ஆறியாதகாயமப்பா வனந்தவரைமாட்டும்
மந்திடந்தான்சகலசித்தக் காதிபீடம்
வெளிகாண சதாசிவந்தான் மின்னல்கோடி
வெளிச்சம்போல்கண் கூசம்பார்க்கப்போகா
வழிகாணமுத்திதனில் துவாதசந்தான்
மகாசொர்க்கமுத்தியுமா மட்டசித்தே 29
அட்டசித்தாமெட்டெட்டுஞ் சித்தியாகுஞ்
மடிமுடியாமிரண்டுக்கும் வழிதானீது
விட்டெழுத்துதொட்டெழுத்தும்விடாதெழுத்தும்
வேதாந்தசற்குரவை வணங்கிக்கேளு
சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு
சன்முகமாமாதாரக் கருவைக்கேளு
திட்டமுடன்மனவுறுதி சின்மயத்தைவெல்லுந்
திருச்சிற்றம்பலம்போற்ற ஞானமுற்றே 30
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
வாழ்க வளமுடன்
மித்ராசாமி SMP-DA
|
|