|

|


அன்பே
சிவம்...Om Namasivaya
வெளிநாடுகளில் வினாயகர்
இலங்கை வினாயகர்
இலங்கையில் முறிகண்டி வினாயகர் கோவில் உள்ளது.இக் கொவில் வழியாக செல்பவர்கள்
தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிச் சென்று இவரை வழிபட்ட பின்னரே இங்கிருந்து
செல்லுகின்றனர். அவ்வாறு வழிபடாமல் போனால் அவர்கள் செல்லும் வாகனத்தின் அச்சு
முறிந்து விடும். இதனாலேயே காரணப் பெயராக இவரிற்கு முறிகண்டி வினாயகர் எனப்
பெயர் வந்தது.
பர்மா வினாயகர்
மியான்மரில் (பர்மா) வினாயகரை மகாபைனி என அழைக்கின்றனர். புத்த
மதக்கோவில்களிலும் வினாயகரின் சிலைகள் உள்ளன. இங்குள்ள வினாயகர் சிலைகள்
அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் உள்ளன. வினாயகர் சதுர்த்தி விழாவும் மகாபைனி
என்று கொண்டாடப்படுகிறது..
சீனா வினாயகர்
சீனாவில் வினாயகரை சிலை வடிவிலும் யந்திர வடிவிலும் வழிபடுகின்றனர்.
இங்கு
இவரை குவான்ஹீடியிக் என அழைக்கின்றனர். கோட்டான் என்ற ஊரில் உள்ள வினாயகர்
முத்து மாலை, தோள்வலையம், கிரீடம் ஆகியவற்றுடன் புலித்தோலணிந்து கறுப்பு நிற
பர்முடாஸ் போன்ற ஒரு வித ஆடையுடன் காணப்படுகிறார்.
.
திபெத் வினாயகர்
திபெத் நாட்டில் வினாயகர் பெண் உருவில் காட்சி தருகிறார். இவரை கணேசினி அல்லது
கணேசாயினி என அழைக்கின்றனர். புத்தர் சிலைக்கு அருகிலேயே விகாயகர் சிலைகளும்
காணப்படுகின்றன. நர்த்தன வினாயகர் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. இச் சிலைகள்
மண்டை ஓட்டு மாலை, எலும்பு மாலை, சிந்தாமணி அணிந்து, கைகளில் கமண்டலம், மோதகம்,
கோடரி? திரிசூலம் ஏந்தி, நெற்றியில் பிறை சந்திரன் வடிவில் பொட்டிட்டு
காட்சியளிக்கின்றன. இங்கு கோவில் வாசல்களில் காவல் தெய்வமாக வினாயகரை
வைத்துள்ளனர். டிஸ் - ஆக்ஸ்பாக், பாடாக்போ, பிக்கஸ்பாங் என்ற பெயர்களினாலும்
வினாயகரை அழைக்கின்றனர்.
எகிப்து வினாயகர்.
எகிப்து நாட்டில் வினாயகரை போருக்கும், அமைதிக்கும் உரிய கடவுளாக கருதி
வழிபடுகின்றனர். வினாயகர் வழிபாட்டு முறையை கேதேஸ் என அழைக்கின்றனர். இவர்
கையில் சாவி ஒன்றிருக்கும். இதன் மூலம் இவர் சொர்கத்தின் கதவுகளை திறந்து தன்னை
வழிபடும் பக்தர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்ற நம்பிக்கையும் மக்கள்
மத்தியில் உள்ளது.
ஜப்பான் வினாயகர்.
ஜப்பான் நாட்டின் காங்கி – டெக் என்ற புத்த மதக் கடவுளுடன் வினாயகர் சிலைகளும்
காணப்படுகின்றன. வினாயக்ஷா, கவான்மின்ஷேர் என்ற பெயர்களினால் இவர்
அழைக்கப்படுகிறார். யோகநிலையில் காட்சியளிக்கும் வினாயகர் சிலைகளும்
காணப்படுகின்றன. இங்குள்ள கோவில்களின் நான்கு திசைகளிலும் திசைக் கொன்றாக
வினாயகர் சிலைகள் காவல் தெய்வங்களாக அமைக்கப்பட்டுள்ன. கி.பி. 6ம்நூற்றாண்டில்
வினாயகர் வழிகாடு இங்கு ஆரம்பித்திருக்கலாம் என அய்வாளர்கள் கூறுகின்றனர்.
கம்போடியா வினாயகர்
கம்போடியா நாட்டில் வினாயகர் ஒரு தந்தத்தை கையில் ஏந்தி, மூன்று
கண்களையுடையவராகவும், பூணூல் அணிந்து, கையில் கமண்டலம், திருவோடு, கரணடி
ஏந்தியவராகவும் காட்சியளிக்கிறார். சேர்க்குங் என்ற சந்தன மலைப்பகுதியில்
சந்தனப் பிள்ளையார் கோவில் உள்ளது. இவரை இங்கு பிராக் கணேஷ் என்று அழைக்கின்றனர்.
ஜாவா வினாயகர்.
ஜாவா நாட்டில் வினாயகரை கல்விக் கடவுளாக வழிபடுகின்றனர். இங்குள்ள வினாயகர்
சிலைகள் தந்தம் உடையாமல், மொட்டை தலையுடன், மண்டைஓட்டு மாலை, எலும்பு மாலை
அணிந்து, கையில் கோடரியு ம்
கரண்டியும் ஏந்தி காட்சியளிப்பார். நம்நாட்டைப் போலவே ஆற்றங்கரைகளில் வினாயகரைக்
காணலாம். ஈவை யாவும் சுயம்புவாக தொன்றியவையாக கருதப்படுகின்றன.
நேபாள வினாயகர்
இங்குள்ள வினாயகர் ஆறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். காட்மண்டு நகரில்
வினாயகரிற்கு நாகம் குடைபிடித்திருக்கிறது. இரண்டு மூஞ்சூரு வாகனங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புத்த மதத்தினரும் வினாயகரை வழிபடுகின்றனர்.
புத்தர் தன் சீடரான ஆனந்தருக்கு கணபதி கிருதயம் என்ற மந்திரத்தை அருளியுள்ளார்.
நேபாள மக்கள் எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் வினாயகர் வழிபாடு செய்து
கணபதி கிருதயம் மந்திரம் செல்லிய பின்னரே ஆரம்பிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் வினாயகர்.
ஆப்கானிஸ்தானின் தரிக்காபீர் ரச்சஞ்நாத் என்ற ஊரில் உள்ள கோவிலில் நின்ற
திருக்கோலத்தில் உள்ள வினாயகரை வழிபடுகினறனர். இவர் நான்கு கைகளுடன் பாம்பணிந்து,
உருத்திராட்ச மாலை அணிந்து, இடது தந்தம் ஒடிந்து; காட்சியளிக்கிறார்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
வாழ்க வளமுடன்
மித்ராசாமி
SMP-DA
|
|