www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  12-10-2008

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 
 
 

Religion

Aanmegam
Kaumaram 
Sugant
Geta
Murugan
Tirumalai 
 
 
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

சர்வ தாரி வருடம் கலியுகாதி 5109
     ஆங்கில வருடம் 2008 - 2009

     -------------------------------------
                  

சுபஸ்ரீ 21வது சர்வ தாரி ஆண்டு சித்திரை மாதம் முதலாம் நாள் ஆங்கில தேதி 13-04-2008 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை நவமி திதியும், பூசம் நட்சத்திரமும், திருதி நாம யோகமும், பாலவ கரணமும், சித்த யோக ஜீவன் நிறைந்திருக்கக் கூடிய நேரத்தில் பஞ்ச பட்சியில் கோழி அரசு வலிமை பெறும் வேளையில் சந்திர ஓரையில் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி திசை, கேது புத்தி, புதன்’ அந்தரத்தில் உதையாதி நாழிகை 27 வினாடி 05 க்கு அதாவது மாலை மணி 04 நிமிடம் 50 க்கு கன்னி லக்கினத்தில் சர்வதாரி ஆண்டு பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்படி 13-04-2008 ஞாயிற்றுக்கிழமை நாழிகை 31 விநாடி 10 க்கு மாலை மணி 6 நிமிடம் 28 க்கு புத்தாண்டு பிறக்கிறது.


நற்சருவதாரி தன்னிற் நல்ல மழை உண்டாகும்
அற்பவித்தான தெல்லாம் ஆகாது – சொற்பெரிய
ஐந்து வகை விளைவும் ஆகும் சுகமுடனே
மைந்தரெல்லாம் வாழ்ந்திருப்பர் மற்று!


                      என்ற பாடல் இடைக்காடர் என்ற சித்தர் தன் வெண்பாவில் பாடியுள்ளார். அதாவது இந்த வருடத்தில் நல்ல மழை உரிய பருவ காலங்களில் பெய்யும். அற்பமான, அவசியமில்லாதவையெல்லாம் ஆகாது. அவசியமான ஐந்து வகையான தானிய விளைச்சலும் பெருகும். மக்களெல்லாம் சுகமுடனே வாழ்ந்திருப்பர்.


              
  சித்திரை வருடப்பிறப்பு பூசை முறைகள்
                 -------------------------------------------------

                     ஞாயிற்றுகிழமை காலை எழுந்து காலைக் கடன்களை முடித்த பின்னர் 7-31 – 9-01 க்குள்ளான நேரத்தில் வீட்டிலுள்ள பூசை அறையில் சாமிபடங்களை அலங்காரம் செய்து, சாமிப்படங்களின் முன்பாக அரிசி, காய்கறிகள், பருப்புவகைகள், பழங்கள், பலகாரங்கள், ஒரு கிண்ணத்தில் சில்லரைக் காசுகளை குவியலாக எடுத்து வைக்க வேண்டும். சாமிப்படங்களின் எதிர்புறம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை (கண்ணாடியில் பார்க்கும் போது சாமிப்படங்களும் நாம் வைத்த பொருட்களும் தெரியுமாறு) வைக்க வேண்டும்.
                   வருடப் பிறப்பன்று மாலையில் பூசை அறையில் உள்ள கண்ணடியில் சாமிப்படங்களின் விம்பங்களையும், நாம் வைத்த பொருட்களின் விம்பங்களையும் பார்க்க வேண்டும். பின்னர் குளித்து புத்தாடை அணித்து வருடம் பிறந்த பின் தெய்வங்களை முறைப்படி தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து வணங்க வேண்டும். நிவேதனமாக பால் சோறு, முக்கனிக் கூட்டு, பாயாசம் வைக்கவும். எந்த குறையும் இல்லாமல் இந்த ஆண்டில் சகல வளமும் பெற்று சீரும் சிறப்புமாக நானும், எனது குடும்பமும், சுற்றமும், நண்பர்களும், உலகில் உள்ள நல்லவர்கள் அனைவரும் வாழ அருள் புரிய வேண்டும் என எல்லாம் வல்ல பரம் பொருளை பிரார்த்தித்து பூசையை நிறைவு செய்யவும். நல்ல நேரத்தில் பெரியோர்களை வணங்கி ஆசீர்வாதம் வாங்கி அவர்கள் கையினால் கைவிசேடம் வாங்கவும்.
                   இந்த முறை சர்வதாரி ஆண்டானது 13ம் திகதி மாலையில் பிறப்பதால் 14ம் திகதி திங்கட்கிழமை காலையிலும் காலை 6-00 – 7-00 மணிக்குள்ளான நேரத்தில் தெய்வங்களை முறைப்படி தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து வணங்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தாம்பூலம் வைத்து நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். சூரிய பகவானையும் தூப, தீப நைவேத்திய ஆராதனை செய்து சூரிய காயத்திரி மந்திரம் சொல்லி வணங்கி சர்வதாரி ஆண்டு சகல சௌபாக்கியங்களையும் தர வேண்டும் என்று வேண்டி வழிபட வேண்டும்.

இராசி ஆதாய – விரய விசயங்கள்:-
       ராசிகள்            ஆதாயம்       விரயம்

மேடம், விருச்சிகம்        5                            11
இடபம், துலாம்           14                              2
மிதுனம், கன்னி            2                             2
கடகம்                   2                              8
சிம்மம்                  14                            8
தனுசு, மீனம்              8                             2
மகரம், கும்பம்            11                          11
மொத்தம்                56                           44


ர்வதாரி வருட கந்தாய பலன்
    அசுவினி      -- 3 – 0 – 4
    பரணி        -- 6 – 1 – 2
    கார்த்திகை    -- 1 – 2 – 0
    ரோகிணி      -- 4 – 0 – 3
    மிருகசீரிடம்   -- 7 – 1 – 1
    திருவாதிரை   -- 2 – 2 – 4
    புனர்பூசம்     -- 5 – 0 – 2
    பூசம்         -- 0 – 1 – 0
    ஆயில்யம்    -- 3 – 2 – 3
    மகம்         -- 6 – 0 – 1
    பூரம்         -- 1 – 1 – 4
    உத்தரம்      -- 4 – 2 – 2
    ஹஸ்தம்     -- 7 – 0 – 0
    சித்திரை      -- 2 – 1 – 3
    சுவாதி        -- 5 – 2 – 1
    விசாகம்      -- 0 – 0 – 4
    அனுசம்       -- 3 – 1 – 2
    கேட்டை       -- 6 – 2 – 0
    மூலம்         -- 1 – 0 – 3
    பூராடம்        -- 4 – 1 – 1
    உத்திராடம்     -- 7 – 2 – 4
    திருவோணம்   -- 2 – 0 – 2
    அவிட்டம்      -- 5 – 1 – 0
    சதயம்         -- 0 – 2 – 3
    பூரட்டாதி       -- 3 – 0 – 1
    உத்ரட்டாதி     -- 6 – 1 – 4
    ரேவதி         -- 1 – 2 – 2

கந்தாய பலன்
1 லாம் கந்தாயம் சித்திரை முதல் ஆடி வரை
2 ஆம் கந்தாயம் ஆவணி முதல் கார்த்திகை வரை
3 ஆம் கந்தாயம் மார்கழி முதல் பங்குனி வரை

முதல் கந்தாயம் 0 வந்தால் வியாதி, கஸ்டம்
இரண்டாம் கந்தாயம் 0 வந்தால் கடனும், தரித்திரமும்
மூன்றாம் கந்தாயம் 0 வந்தால் மன அமைதியின்மை, நிம்மதி குறைவு
மூன்றும் 0 வந்தால் கடுமையான கஸ்டமும், தரித்திரமும்.

ஒற்றை தானமானால் நிம்மதி, சந்தோசம், தனலாபம் ஆகும்
இரட்டை தானமானால் சமனான பலனும் ஆகும்
இவ்வாறு கந்தாய பலன் அறிந்து கொள்ளவும்.



  சகலரும் எந்த குறையுமில்லாமல், சகல செல்வமும் பெற்று, 

           சிறப்பாக வாழ எல்லாம் வல்ல பரம் பொருள் அருள்    

                                                புரியட்டும்
 

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.


வாழ்க வளமுடன்

    மித்ராசாமி SMP-DA

   பாண்டிசாமி SMP-DA
 

 

சித்திரை வருடப்பிறப்பு பூசை முறைகள் 13-04-2008

 



                          Home                                   [C] Copyright 2004-2008           www.Aanmegam.com                            CONTACT