< aanmegam


www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  27-01-2010

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 
 
 

Religion

Aanmegam
Kaumaram 
Sugant
Geta
Murugan
Tirumalai 
 
 
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

        2010 ம் ஆண்டு மகாசிவராத்திரி விரதம் அனுச்டிப்பது எப்போது என்ற கேள்வி பலரிடையே ஏற்பட்டுள்ளது. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று தான் மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிப்பது நடைமுறையாகும் ஆனால் இம் முறை பஞ்சாங்களிலும், நாட்காட்டிகளிலும் தை மாத தேய்பிறை சதுர்த்தசி திதியன்று மாகா சிவராத்திரி என்று குறிக்கப்பட்டுள்ளது.

            தமிழ் நாட்டில் உள்ள பல சிவாச்சாரியார்கள் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி 13-03-2010 அன்று தான் மாகாசிவராத்திரி விரதம் அனுஸ்டிக்க முடிவெடுத்துள்ளனர். உதாரணமாக மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தினர் மற்றும் தஞ்சாவூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட 90 சிவாலயங்கள் இந்த முடிவை தெரிவித்துள்ளனர்.

        ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஆகம வல்லுனர் திரு. ஞானசம்பந்த சிவர்சாரியார் ஸ்ரீபுரண சதுர்த்தசி திதி வருவது 12-02-2010 அன்று தான் மற்றும் கோகுல அஸ்டமியிலிருந்து 184 நாள் வருவதும் 12-02-2010 அன்று தான் மற்றும் 13-03-2010 ல் சதுர்த்தசி கால அளவு மற்றநாளை விட குறைவானதாயும் அன்று மீன சங்மரணதோசம் உள்ளதாலும் 12-02-2010 அன்று தான் மகாசிவராத்திரி என விளக்கியுள்ளார்.

            இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலைகள் வரும் காலங்களில் முன்கூட்டியே ஆகம வல்லுனர்களும், சோதிட விற்பனர்களும் கூடி ஒரு நிலையான தீர்க்கமான முடிவினை வெளியிடுவதே பாமர மக்களிற்கு உரிய முறையில் விரதங்களை அனுசரிக்க வழிவகுக்கும் என ஆன்மீகம்.கொம் சார்பாக மேற்படி ஆகம வல்லுனர்களையும், சோதிட விற்பனர்களையும் வேண்டி கேட்டுக் கொள்கிறோம். இதைத் தவிர்த்து உங்கள் அறிவுத்திறனைக் காட்டி ஆகம விதிகள், மற்றும் சோதிட நுட்பங்கள் அறியாத அப்பாவி மக்களை தயவு செய்து குழப்ப வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். 

நான்கு சாமத்திற்கு மேல் ஒரு நாழிகை மகாநிசி காலமாகும். அந்த காலத்தில் சதுர்த்தசி இருப்பின் அன்று சிவராத்திரி ஆகும்.

ராத்ரௌ யாமத்யாதர்வாக் கடிகைகா மஹாநிசா

தஸ்யாம் சதுர்த்தசீ யஸ்மாத்தத் ராத்ரிச் சிவராத்திரிகா    

                                               --- ( குமார தந்திரம் )

 

நடுநிசியுடன் கூடிய மாசிமாதத்திய கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி அன்று சிவனிற்கு விரதமிருந்து சிவராத்திரி விரதமனுஷ்டித்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

அர்த்தராத்ர யுதாயத்ரமாக க்ருஸ்ணா சதுர்த்தசீ

சிவராத்திரி வ்ரதம் தத்ர சாச்சமேதபலம் லபேத

                                        --- ( நாரதீய ஸம்ஹிதை )

 

சூரியன் அஸ்தமிக்கும் காலத்தில் சதுர்த்தசி திதியுள்ள நாளில் சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது ஆகும்.

ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி  சேத்யா சதுர்த்தசீ

தத்ராத்ரௌ சிவராத்ரிச்யாத் ஸாப வேதுத்த மோத்தமா   --- (விமலம்)

 

நடுநிசியில் என்று சதுர்த்தசி வியாபித்திருக்கிறதோ அன்று சிவ விரதம் அனுஸ்டிக்க வேண்டும்.

பூர்வேத்யுர் வாபரேத்யுர்வா மகாநிசி சதுர்த்தசீ

வ்யாபத்தாச திருச்யதே யஸ்யாம் தஸ்யாம் குர்யாத் வ்ரதம்                                                                               --- (சிவராத்திரி நிர்ணயம்)

 

சதுர்த்தசியில் சிவனை பூசித்து தூக்கம் விடுத்து சிவ தியானம் செய்பவர்களிற்கு இன்னொரு பிறப்பு கிடையாது.

சுவஞ்ச பூஜயித்வாத யோஜா கர்த்தி சதுர்த்திசீம்

மாது படீயாதர ரசம் நபி பேச்ச கதாசன

 

முதல்நாள் நடுநிசிக்குப் பின்னர் திரயோதசி வந்தால் மறுநாள் அமாவாசையோடு கூடிய சதுர்த்தசி அன்று சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கலாம்.

மகா நிசாயா பரத திரயோதசி யுதந்து சேத்

அமா சதுர்த்தசீ பூஜா ந தோசமிதி கீர்த்திதநம்     --- ( காமிகம் )

 

அமாவாசையுடன் கூடிய சதுர்த்தசியானாலும் திரயோதசியுடன் கூடிய சதுர்த்தசி ஆனாலும் சதுர்த்தசி நாழிகை அதிகம் இருக்கும் நாளில் சிவராத்திரி விரதமிருக்க வேண்டும்.

அமாவாஸ்யா யுதாவாபி திரயோதசி யுதாபிவா

சதுர்த்தச்யதி காராத்ரி சிராத்திரி நித்ஸ்ம்ருதா     --- ( சுயாம்புவம் )

 

சிவராத்திரி விரதம் எப்போது என நமது முன்னோர்களான நமது வழிகாட்டிகள் நமக்கு கூறியதை மேலே தந்துள்ளோம்.

 

            வழக்கமான முறைப்படி மாசிமாதத்தில் வரும் சதுர்த்தசி திதி 13-03-2010 அன்று சிவராத்திரி விரதம் அனுஸ்டிப்பதே சரியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இறைவன் மனமுருகி என்று வழிபட்டாலும் அருள் புரிபவன். உள்ளத் தூய்மையுடன், உண்மையான பக்தியுடன், இறைசிந்தனையாக இருந்து, காலம் நேரம் பாராது இறைவனை வழிபடுங்கள். எவன் அருள் என்றும் உங்களிற்கு கிட்டும்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

மித்ராசாமி SMP-DA

 

 



                          Home                                   [C] Copyright 2004-2008           www.Aanmegam.com                            CONTACT