www.aanmegam.com.......       Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  12-10-2008

 
About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 

 

PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 

 

 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
 Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 

 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 

அன்பே சிவம்...Om Namasivaya

தோசங்கள் போக்கும் ராகு கால பூஜைகள்.

மக்களுக்கு பல நன்மைகள் தந்து நல்வாழ்வை அளிக்கும் காலங்கள் பல உள்ளன. பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் உண்டாகிறது. இருட்டில் இருப்பவர்களிற்கு வெளிச்சமாகவும், வருத்தப்படுபவர்களிற்கு வளம்தரும் கற்பகமாகவும் விளங்கும் ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகுகாலம் 1மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 - 9.00, செவ்வாய் 3.00 - 4.30, புதன் 12.00 - 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12.00, சனி 9.00 - 10.30 ஆகும். ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும். இந்தநேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்க நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோசங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.


சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை.
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)


மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை.
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்;பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.


கிரக சர்ப்ப சாந்தி.
பாம்பினை அடிப்பதால் வரும் தோசம்;, முன்னோர்களினால் வந்த நாக தோசம்; நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதிற்க்கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளிற்கு அன்னதானம் செய்ய வேண.டும்.


1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.


கேது பகவான்.
ராகுவின் உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.
கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

ராகு, கேது ஸ்தலங்கள் திருப்பதி அருகிலுள்ள திருக்காளஹஸ்தி, கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் ஆகும்.


விளக்குத்திரி தரும் பலன்கள்.
1. பஞ்சுத்திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்.
2. தாமரைத்தண்டுத்திரி - முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
3. வாழைத்தண்டுத்திரி - தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
4. வெள்ளெருக்கன் பட்டைத்திரி - வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.


விளக்கேற்றும் திசைகள்
1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.
4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது


விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.
1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.
6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.


ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது. பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்
.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

வாழ்க வளமுடன்

பாண்டிசாமி.SMP-DA

 

  Home                                        [C] Copyright 2004-2008                         www.Aanmegam.com                            CONTACT