|
|
|||||||||||||||||||||||||
|
www.aanmegam.com. Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 24-09-2011 |
|||||||||||||||||||||||||
![]()
|
அன்பே சிவம் --- Om Nasivaya
நவராத்திரி
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள்,
ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன்
சிறந்த வெற்றியாளனாக திகழ
ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையையும் இனிப்பார்ப்போம்
நவராத்திரி கொலு
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும்.
கொலு
1. முதலாம் படி :-
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின்
பொம்மைகள்.
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின்
பொம்மைகள்.
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின்
பொம்மைகள்.
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள்,
ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள்
போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
பிரம்மா,
விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின்
தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
இந்த வருடம் நவராத்திரி விரதம் 27 – 09 – 2011 செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகிறது. அதற்கு முதல் நாளான திங்கட்கிழமை மாலை 06 – 00 மணியிலிருந்து 07 – 00 மணிக்குள்ளான நேரத்தில் கொலு வைக்க சிறந்த நேரமாகும். பின்னர் விஜயதசமியன்று 06 – 10 – 2011 பூசை முடித்த பின்னர் கொலு பொம்மைகளை படுக்க வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அதாவது 07 – 10 – 2011 அன்று காலையில் கொலுவை எடுத்து விடலாம். நவராத்திரி விரதம் பரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்தநாள் அதாவது பிரதமை திதியில் அன்று ஆரம்பித்து தசமி திதியில் நிறைவடையும். இந்த கரவருடத்தில் புரட்டாசி அமாவசை 27 – 09 – 2011 அன்று மாலை இந்திய நேரப்படி 05 மணி 39 நிமிடத்திற்கு முடிவடைந்து அதன் பின்னர் பிரதமை திதி ஆரம்பிக்கிறது. திதிகள் பொதுவாக இரவு 06 மணியிலிருந்து இரவு 08 மணிவரை எந்த திதியுள்ளதோ அதே திதி கணக்காக எடுத்துக் கொள்ளப்படுவது ஒருமுறை ஆகும். மற்றொரு முறையில் எந்த நாளில் குறிப்பிட்ட திதி அதிக நாழிகை உள்ளதோ அந்த நாளில் அந்த திதியே அன்றய திதியாக கொள்ளப்படுகிறது. இவ்விரண்டு அடிப்படையில் பார்த்தாலும் 27ம் திதியே பிரதமை திதி ஆகிறது எனவே 27 – 09 – 2011 அன்றே நவராத்திரி விரதம் ஆரம்பிக்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்டசராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப்
பொங்கல். மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவதாக நாம் கருதலாம்.
இரண்டாம்
நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம். இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம்
நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார்கள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில்
காட்சியளிப்பார்கள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங்காரத்தில்
அருள்புரிவார்கள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவசக்தி கோலத்தில் மக்களிற்கு அருள்பாலிப்பார்கள்.
ஏழாம் நாள்
நைவேத்தியம் :-
கல்க்கண்டுச் சாதம்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில்
காட்சியளிப்பார்கள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அருளாட்சி
புரிவார்கள்.
|
|
|||||||||||||||||||||||
|
Home [C] Copyright 2004-2011 www.Aanmegam.com CONTACT |