|


அன்பே
சிவம்...Om Namasivaya மரத்தடி வினாயகர் மகிமைகள்
சகல வரங்களையும் சகல வல்லமைகளையும் தரக்கூடிய வினாயகப் பெருமான் பொதுவாக
குளக்கரைகள், மரத்தடிகள், தெருவோரங்கள், முச்சந்திகள் போன்ற இடங்களிலேயே
குடியிருப்பார். எந்தெந்த மரத்தடியில் இருக்கும் வினாயகர் என்னென்ன பலன்
தருவார் எனப் பார்ப்போம.
அரச மரத்தடி வினாயகர் (கிழுக்கு):-
மூல நட்சத்திரத்தன்று பால் அபிசேகம் செய்து மோதகம் படைத்து வணங்கி மனமுருகி
வேண்டிவர நினைத்த காரியம் கைகூடும்.
வன்னி மரத்தடி வினாயகர் (கிழக்கு):-
அவிட்ட நட்சத்திரத்தன்று நெற்பொரியினால் அபிசேகம் அர்ச்சனை செய்து வணங்கிவர
கன்னிப்பெண்களிற்கு நல்ல வரன் அமையும். வாகன வியாபாரிகளிற்கு நல்ல லாபம்
கிடைக்கும.
வில்வ மரத்தடி வினாயகர் (தெற்கு):-
தெற்குத் திசை பிள்ளையார் கல்வி கற்கும் குழந்தைகளிற்கு மிகவும் சிறப்பான
பலன் தரக்கூடியவர். புதன், வியாழக் கிழமைகளில் சந்தனக்காப்பிட்டு வணங்கிவர
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சித்திரை நட்சத்திரத்தன்று வணங்கி வர
கணவன் மனைவி நல்ல ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
ஆல மரத்தடி வினாயகர் (வடக்கு):-
மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னம் வைத்து வைத்தியர்கள் வணங்கிவர
வைத்தியத்துறையில் நல்ல பேரும் புகழும் பெறுவார்கள். நோயாளிகள் வணங்கிவர
எவ்வளவு கடுமையான நோயாயிருந்தாலும் அதிலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.
வேப்ப மரத்தடி வினாயகர் (கிழக்கு):-
உத்தரட்டாதி நட்சத்திரத்தன்று பஞ்ச தீபம் (பசுநெய், நல்லெண்ணை, தேங்காய்
எண்ணை, இலுப்பெண்ணை, விளக்கெண்ணை ஆகிய ஐந்து தீபம்) ஏற்றிவணங்கிவர
கன்னிப்பெண்களிற்கு விரைவில் திருமணம் நடக்கும். நல்ல வரன் அமையும்.
வியாபாரிகள் நல்லலாபம் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்படையும்.
வேலையில்லாதவர்களிற்கு வேலைகிடைக்கும். அன்று தயிர்ச்சாதம் தானம் செய்தால்
சிறப்பான பலன்கிடைக்கும்;.
நெல்லி மரத்தடிப் பிள்ளையார் (கிழக்கு):-
பரணி நட்சத்திரத்தன்று வினாயகரிற்கு தேங்காயெண்ணையில் 108 தீபமேற்றி,
அன்னதானம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சகலவிதமான நன்மைகளும்
கிட்டும்.
மா மரத்தடிப் பிள்ளையார்:-
கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு 3 ஏழைச் சுமங்கலிப்
பெண்களிற்கு வஸ்த்திர தானம், அன்னதானம் செய்தால் பாதிக்கப்பட்ட வியாபாரம்
சிறப்புடன் நடக்கும். தொழில் போட்டிகள் விலகும். அரசாங்க உத்தியோகத்தில்
இருப்பவர்களிற்கு பதவி போன்ற நன்மைகள் கிட்டும். வாழ்க்கை நலம் பெறும்.
நாவல் மரத்தடிப் பிள்ளையார் (வடக்கு):-
ரோகிணி நட்சத்திரத்தன்று புனித நீரால் அபிசேகம் செய்து குழந்தைகளிற்கு
வெண்ணெய் தானம் செய்தால் குடும்பம் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக
இருக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மகிழ மரத்தடிப் பிள்ளையார்:-
அனுச நட்சத்திரத்தன்று மாதுளம்பழ முத்துக்களால் அபிN~கம் செய்துவர
வெளிநாட்டில் வேலைகிடைக்கும். இராணுவம், காவல்துறையை சேர்ந்தவர்கள் உயர்ந்த
பதவி அடைவார்கள். நோயாளிகள் நோய் குணமாகி நல்ல சுகம் பெறுவார்கள்.
புன்னை மரத்தடிப் பிள்ளையார் :-
ஆயில்ய நட்சத்திரத்தன்று இளநீர் அபிசேகம் செய்து கைத்தறி துணியை
பிள்ளையாரிற்கு சாத்தி அதனை ஏழைகளிற்கு தானம் செயதுவர குடும்பம் சகல
செல்வமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழும்.
சங்கடஹர சதுர்த்தி அன்று வினாயகரிற்கு அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர
காரிய சித்தியாகும். மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்ல பட்ச
சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும்
வெற்றி என்பது உறுதியாகும்.
நாகசதுர்த்தி அன்று அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர நாகதோசம், ராகு,
கேதுக்களினால் ஆன சகல தோசமும் நீங்கும். குழந்தை இல்லாதவர்களிற்கு தோசம்
நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.
மூலப்பொருளாம் வினாயகரை வணங்கி
சகல நன்மைகளும் அடைவோமாக.
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.
வாழ்க வளமுடன்
மித்ராசாமி
பாண்டிசாமி
|