< aanmegam


www.aanmegam.com.......    Om Sakthi Astro Research centre - MADURAI.      CONTACT     Fonts         updated  27-01-2010

About Us
Vote for us
27 Rasigal
12 Sidhargal
63நாயன்மார்கள்
 
 
 
PICTURE GALLERY
Pic-Gallery-Vinayagar
Pic-Gallery AMMAN
Pic-Gallery Sivan
 
 
 
 
 Thevarankal
சிவபுராணம்
பஞ்ச புராணம்
கந்தர் சஷ்டி கவசம்
Slokam-MP3
Siva Mandram
Vinayagar Padalkkal
Vinagar Agaval
 
 
 

Religion

Aanmegam
Kaumaram 
Sugant
Geta
Murugan
Tirumalai 
 
 
 


 

அன்பே சிவம்...Om Namasivaya

               நமது நாட்டு விரதங்களில் நவராத்திரி சிவராத்திரி என்ற இரண்டுமே ராத்திரி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.

ராத்திரி என்பது என்ன,

              
ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந் தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும்; சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்தவரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கககூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர்.

எதனால் தூக்கம் வருகிறது,

எதனால் தூக்கம் வருகிறது, தூக்கம் அவசியம்தானா, என்று விசாரித்த சிலா இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர்.

நமது உப நி~த்ஸ்;வம் அபீதோபவதி என்கிறது. அதாவது தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது.

பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத்தூங்கினேன் என எழுந்தபின் கூறுகிறோம்.

சக்தி தரும் சிவன்„- அச்சமயம் நாம் இழந்த சக்தியை பகவான் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்னுலகும் விண்னுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுகிகிறது. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும்.

நாம் பகலில் வேலை செய்து களைத்துபபோவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன் தனக்குள்லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். புpர லயம் என்பதே பிரளயம் என்றாயிற்று. லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிர என்றால் உலகம். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும்.

பிரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப்பொடிகள் உருத்தெரியாமல் மறைவது போல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் சிருஸ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கு ஏற்றபடி உடல் எடுக்கிறார்கள்.

அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்திரி ஆகும். அன்று சிவனைத்தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனைவிட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள் குழந்தைகளான நம் பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவபூஜை இல்லாவிழல் நாம் வாழ முழயாது. உலகம் ஒடுங்கிய பொழுது பார்வதி- சிவனை நாம் சிவமாக (சேமமாக) இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்திரி ஆகும். அது மாசி மாத தேய் பிறையாகும்.

நமக்காக தேவி சிவனைப் பூஜித்த தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் தினம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத்தரும். அன்று சுத்த உபவாசம் இருந்து இரவு கண் விழித்து நான்கு கால பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அவரரவர் விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். அத்துடன் விருப்பமேயில்லாத மனநிலையையும் தந்தருளுவேன் என வருமளித்தார்

அபிசேகப்ரியன்: அபிசேகப்ரியன் சிவன். அலங்காரப்ரியன் விஸ்ணு சிவலிங்கத்திற்கு அபசேகம் செய்யச் செய்ய நமது துன்பம் அகலும் நோய் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். நல்ல எண்ணெய் பஞ்சகவ்யம் பஞ்சாமிருதம் நெய் பால்; தயிர் தேன் கரும்புச் சாறு இளநீர் பழரசம் சந்தனம் ஐந்து கலச தீர்த்தம் -இந்த வரிசைக் கிரமத்தில் இந்த வஸ்துக்களால் பதினொரு ருத்ர ஜபத்துடன் அபிசேகம் செய்யவேண்டும். பூஜை செய்யாதவர் புஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிசேகம் தரிசனம் செய்யவேண்டும்.

சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும்; மூர்த்தி சிவன் அதேபோல் சீக்கிரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபசேக திரவியங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தமாக இருந்து மனம் வாக்கு உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாக பூஜை செய்து சிவனருள் பெறலாம்.

சிவனுக்குரிய முக்கிய விரதங்களில் சிவராத்திரி விரதம் முக்கிய விரதமாகும். நித்ய, பட்ச, மாத, யோக, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகைப்படும். மாதந்தோறும் கிருட்ணபட்ச சதுர்த்தியில் வருவது நித்ய சிவராத்திரி ஆகும். மாதந்தோறும் வருவது மாத சிவராத்திரி ஆகும். திங்கட்கிழமை பகல், இரவு இரு பொழுதும் அமாவாசையாக இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். கிருட்ணபட்ச மாசி மாத சிவராத்திரி மகாசிவராத்திரி ஆகும்.


சிவராத்திரியைப் பற்றி பல புராணக்கதைகள் உண்டு. ஒரு காலத்தில் உலகம் அழிந்த போது மீண்டும் உலகை சிருஷ்டிக்க வேண்டி அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த இரவே சிவராத்திரி ஆகும். இன்னொரு கதையில் ஒரு நாள் அன்னை உமா விளையாட்டாக தந்தை ஈசனின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும்.

மற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான். துஸ்ட மிருகங்களிற்கு அஞ்சிய வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் அறியமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வ தளை கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.

நான்கு கால சிவ பூஜைகள்

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேறnடிகாண்டு பூஜையைச் செய்து முடிக்க முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம். அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

முதல் சாமம்„- பஞ்சகவ்ய அபிசேகம் சந்தனப்பூச்சு வில்வம் தாமரை அலங்காரம் அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்„- சர்க்கரை பால் தயிர் நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் பச்சைக்கறபூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல் துளசி அலங்காரம் வில்வம் அர்ச்சனை பாயாசம் நிவேதனம் யசுர் வேத பாராயணம்.

மூன்றாம் சாமம் தேன் அபிசேகம் பச்சைக் கற்பூரம் சார்த்துதல் மல்லிகை அலங்காரம் வில்வம் அர்ச்சனை எள் அன்னம் நிவேதனம் சாமவேத பாராயணம்.

நான்காம் சாமம்- கரும்புச்சாறு அபிசேகம் நந்தியாவட்டை மலர் சார்த்துதல் அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்;காரம் அர்ச்சனை சுத்தான்னம் நிவேதனம் அதர்வன வேத பாராயணம்.

வீடுகளில் பூசை செய்பவர்கள் சிவலிங்கம் உள்ளவர்கள் சிவலிங்கத்திற்கோ, இல்லாதவர்கள் நடராஜர் சிலையிற்கோ, அதுவும் இல்லாதவர்கள் சிவன் படத்திற்கோ நான்கு சாமப்பூசைகள் செய்தால்போதுமானது. சிவராத்திரியன்று உபவாசமிருந்து (முடியாதவர்கள் இரவில் பால் பழம் அருந்தி) பூசை செய்யலாம். மாலை 6.30, இரவு 9.30, நடுச்சாமம் 12.30, அதிகாலை 3.30 ஆகிய வேளைகளில் பூசை செய்யலாம். வில்வ பத்திரம் கொண்டு 108 தடவை பஞ்சாட்சர மந்திரம் செபித்து தூப, தீப, ஆராதனை செய்து பூசை செய்ய வேண்டும். பூசை தவிர்ந்த ஏனைய நேரத்தில் தேவாரம் ஓதலாம். பஞ்சாட்சர செபம் செய்யலாம். அதிகாலையில் சிவனடியார்களிற்கு அமுது இட்டு விரதத்தினை நிறைவு செய்யலாம். அன்னதானம் செய்தால்தான் விரதத்தின் முழுப்பலன் கிடைக்கும்.


மார்க்கண்டேயரை காப்பாற்றியது, கண்ணப்பரிற்கு அருள் புரிந்தது, அர்ச்சுனனிற்கு பசுபதாஸ்திரம் வழங்கியது, பீமன் தன் ஆணவம் அழியப்பெற்றது, அன்னை உமைக்கு ஈசன் தன் உடலில் சரி பாதி தந்தது இவை எல்லாம் சிவராத்திரி விரத்தினால் ஏற்பட்டவையே.


சிவனிற்குரிய சிவராத்திரி அன்று விரதமிருந்து சகல நலமும் பெறுவோமாக.


இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.


வாழ்க வளமுடன்

     மித்ராசாமி SMP-DA

 

 

 



                          Home                                   [C] Copyright 2004-2008           www.Aanmegam.com                            CONTACT