|
|
|
www.aanmegam.com....... Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 14-06-2011 |
|
|
அன்பே
சிவம்...Om Namasivaya
கர வருடத்திய சூரிய சந்திர கிரகணங்கள்
இந்த
வருடத்திய முதலாவது சந்திர கிரகணம் வைகாசி மாதம் 32 ம் திகதி (15-06-2011) இரவு
11மணி 52 நிமிடத்திற்கு கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதத்தில் ஆரம்பித்து இரவு
03 மணி 32 க்கு மூலம் நட்சத்திரத்தில் முடிவடைகிறது. சந்திர கிரகணமானது அனுசம்,
கேட்டை, மூலம், பூராடம், ஆயில்யம், ரேவதி, அசுவினி, மகம் ஆகிய நட்சத்திரத்திற்
பிறந்தவர்களிற்கு தோசத்தினைத் தரும்.
தோசம் தரக்கூடிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்று விரதமிருந்து, பச்சை அரிசி, முழு உளுந்து (உளுந்தம் பயறு) வாங்கி வைத்திருந்து மறுநாள் கோவிலில் வினாயகர், சந்திரன், இராகு ஆகியோரிற்கு நெய் தீபமிட்டு வழிபட்ட பின்னர் மூலவரை வழிபட வேண்டும். பின்னர் இவற்றை பிராமணரிற்கு உரிய தட்சனையுடன் தானம் தரவேண்டும். இதனால் கிரகண தோச பாதிப்பு நீங்கும்.
நாம் கடைப்பிடிக்க வேண்டியது
சூரிய கிரகண தோசமுடைய நட்சத்திரக்காரர்கள்
கிரகணத்தன்று விரதமிருந்து கோதுமை, கொள்ளு வாங்கி வைத்திருந்து மறுநாள்
கோவிலிற்கு சென்று வினாயகர், சூரியன், கேது ஆகியோரிற்கு நெய் தீபமிட்டு வழிபட்டு
பின்னர் மூலவரை வழிபட்ட பின்னர் இவற்றை பிராமணரிற்கு உரிய தட்சனையுடன் தானம்
தரவேண்டும். இதனால் கிரகண தோச பாதிப்பு நீங்கும்.
மித்ராசாமி SMP-DA |
|
|
Home
[C] Copyright 2004-2008
www.Aanmegam.com CONTACT |