|
|
|
www.aanmegam.com. Om Sakthi Astro Research centre - MADURAI. CONTACT Fonts updated 27-10-2010 |
|
அன்பே சிவம் --- Om Nasivaya
தீபாவளி
நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான்.
இந்த ஜோதிவடிவான இறைவனை
வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம்
கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை
அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும்
இருக்கிறது.
தீபாவளி நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும். தீபாவளியை எப்படிக் கொண்டாடுவது சிறப்பாக இருக்கும் என்று பார்ப்போம். அதிகாலையில் எண்ணைக்குளியலை அதிகாலை அதாவது சூரிய உதயத்திற்கு இரண்டு நாழிகைகள் முன்னதாக குளித்து விட வேண்டும். மருத்து எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும். நல்லெண்ணையில் இஞ்சி, பூண்டு, மிளகு, சின்னவெங்காயம், விரலி மஞ்சள், சீரகம் சம எடையளவு (நாம் எடுத்த எணணைக்கேற்றவாறு) நன்றா காச்சி ஆறவைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதில் குளிக்கும்
நீரைப்பற்றி நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு
விடயம் உள்ளது. கங்கையில் குளித்தால் நாம் செய்த பாவங்கள்
எல்லாம் தீரும் என்பது விதி. எல்லாரினாலும் கங்கைக்கரைக்கு
சென்று குறிப்பாக தீபாவளி அன்று நீராடுவது என்பது
முடியாத காரியமாகும். இதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்
என்று பார்ப்போம். ஒரு வாளியில் தண்ணீரை நிரப்பி இரண்டு
கைகளையும் வாளியின் மேல் உள்ளங்கை கீழிருக்குமாறு
பிடித்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை பதினாறு தடவை
குறைந்த பட்சம் மூன்று தடவை ஆவது கூறியபின் அந்த நீரில்
நீராட வேண்டும்.
அதன் பின் வீட்டிலுள்ள
எல்லோருமாக சேர்ந்திருந்து இனிப்புவகைகள் பலகாரங்கள்
போன்றவற்றை உண்டு மகிழவேண்டும்.
இந்த இனிய தீபாவளித் திருநாளில் சகல வளமும், சகல நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் புரியட்டும் என வாழ்த்துகிறோம்
மித்ராசாமி SMP-DA.
|
|
|
Home [C] Copyright 2004-2010 www.Aanmegam.com CONTACT |